Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நான்கு நாள் பயணமாக பிரேசிலில் பிரதமர் மோடி.. பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க திட்டம்..

PM Modi: பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பயணமாக பிரேசில் சென்றடைந்தார், அங்கு நடைபெற இருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு, காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை பரிமாறி கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நான்கு நாள் பயணமாக பிரேசிலில் பிரதமர் மோடி.. பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க திட்டம்..
பிரதமர் மோடி
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Jul 2025 08:03 AM

பிரதமர் மோடி, ஜூலை 6, 2025: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பயணமாக பிரேசில் சென்றடைந்தார். ரியோ டி ஜெனிரோ வந்தடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரேசிலில் நடைபெறும் 17 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமரை வரவேற்க இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் நமது பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நடன நிகழ்ச்சி ஆப்ரேஷன் சிந்தூர் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டிருந்தது. இதற்கு முன்னதாக 2025 ஜூலை 5ஆம் தேதி பிரதமர் மோடியும், அர்ஜென்டினா அதிபரும் , இருவழி வர்த்தகத்தை பன்முகப்படுத்தவும், பாதுகாப்பு, முக்கியமான கனிமங்கள், மருத்துவத்துறை, எரிசக்தி மற்றும் சுரங்க துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாள் பயணமாக பிரேசிலில் பிரதமர் மோடி:


ஜூலை 5 2025 தேதி ஆன நேற்று அர்ஜென்டினா சென்ற பிரதமர் அந்நாட்டு அதிபருடன் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய பிரதமர் பிரேசிலுக்கு வருகை தந்துள்ளார். பிரேசில் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள் பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தனர். அதோடு பிரேசிலில் இருந்தும் இந்தியாவின் வளமான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி வரவேற்பு அளித்தனர்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்ளும் பிரதமர் மோடி:


இந்த பயணத்தின் போது 17 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதில் அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு, காலநிலை மாற்றங்கள், உலகளாவிய சுகாதாரம் மற்றும் பொருளாதார மற்றும் நிதி தொடர்பான விஷயங்கள் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை பரிமாறி கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் ஒரு பகுதியாக பிரதமர் இருதரப்பு கூட்டங்களையும் நடத்த வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் லூலாவுடனான சந்திப்பு:

அதேபோல் பிரேசிலுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பரஸ்பர துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை விரிவு படுத்துவது குறித்து அதிபர் லூலாவுடன் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

பிரேசிலில் நான்கு நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி 2025 ஜூலை 9ஆம் தேதி நமீபியாவுக்கு செல்கிறார். அங்கு நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதில் முதல் நாடாக கானாவிற்கு சென்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதேபோல் கடைசியாக அவரது பயணத்தை நமீபியாவில் முடிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.