Narendra Modi : இங்கிலாந்து சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. உற்சாக வரவேற்பு!
PM Narendra Modi England Visit | இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். நேற்று (ஜூலை 23, 2025) மாலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் லண்டன் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு செல்ல உள்ளார்.

லண்டன், ஜூலை 24 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) இங்கிலாந்து (England) சென்றடைந்தார். இரண்டு நாட்கள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள அவருக்கு, லண்டன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையே நீடித்து வரும் சிறப்பான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியின் இந்த இரண்டு நாட்கள் பயணம் அமைந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து பயணத்தின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு நாடகள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிடையே பல காலமாக நல்லுறாவு நீடித்து வரும் நிலையில் அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்துக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ள பிரதமர் மோடி நேற்று (ஜூலை 23, 2025) மாலை டெல்லி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் லண்டன் சென்றடைந்தார்.




இதையும் படிங்க : Donald Trump : பிரிக்ஸ் கூட்டமைப்பு விரைவில் மறைந்து போகும்.. டொனால்ட் டிரம்ப் கருத்து!
இங்கிலாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
Touched by the warm welcome from the Indian community in the UK. Their affection and passion towards India’s progress is truly heartening. pic.twitter.com/YRdLcNTWSS
— Narendra Modi (@narendramodi) July 23, 2025
இந்த பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பயணத்தின் கூடுதல் அம்சமாக பிரதமர் மோடி, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசையும் சந்திக்க உள்ளார். இந்த இரண்டு நாட்கள் பயணத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே தடையில்லாத வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடிக்கும் பிரதமர் மோடி அதற்கு அடுத்தபடியாக மாலத்தீவு செல்கிறார். அந்த நாட்டுப் பிரதமரின் அழைப்பின் அடிப்படையில் அங்கு செல்லும் மோடி ஜூலை 25, 2025 மற்றும் ஜூலை 26, 2025 ஆகிய தேதிகளில் அங்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலத்தீவின் 60வது சுதந்திர தின கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.