பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்.. நமீபியாவின் உயரிய விருது.. முழு விவரம்
Namibia Honours PM Modi : நமீபயா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதுவரை 27 நாடுகளின் விருதுகளைப் பெற்ற பிரமதர் மோடி, இந்த சுற்றுப்பயணத்தில் 4 விருதுகள் பெற்றுள்ளார். 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த கௌரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

டெல்லி, ஜூலை 09 : நமீபியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு (PM Modi) ‘ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ்’ (Welwitschia Mirabilis Award) என்ற விருது வழங்கப்பட்டது. அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி 5 நாடுகளூககு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஏற்கனவே, கானா, டிரினிடாட் அண்டு டுபாபே, அர்ஜண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். 2025 ஜூலை 9ஆம் தேதியான இன்று பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு, நமீபியா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருக்கிறார். தனது பயணத்தின் கடைசி கட்டமாக நபீபியா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருக்ககிறார். பிரதமர் மோடி நமீபியா நாட்டிற்கு செல்லும் முதல் பயணம் இதுவே ஆகும். நமீபியா நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி, அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி நந்தி-நதைத்வாவும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எரிசக்தி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.




பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்
#WATCH | Windhoek: PM Narendra Modi conferred with the Order of the Most Ancient Welwitschia Mirabilis, the highest civilian award of Namibia.
PM Modi says, “… It is a witness to the everlasting friendship between India and Namibia and I feel very proud to be associated with… pic.twitter.com/l0JJg0BgT7
— ANI (@ANI) July 9, 2025
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நமீபியாவின் மிக உயர்ந்த விருதான ‘ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ்’ வழங்கப்பட்டது. இந்த விருது 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
1990ஆம் ஆண்டு நமீபியா சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திலேயே, சிறந்த சேவை மற்றும் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது தற்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “நமீபியாவின் உயரிய விருதான வெல்விட்சியா மிராபிலிஸ் விருது எனக்குக் கிடைத்திருப்பது மிகுந்த பெருமையையும், மரியாதையையும் அளிக்கிறது. நமீபியாவின் ஜனாதிபதி, நமீபியா அரசு மற்றும் நமீபியா மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read : ’ஜனநாயகம் அமைப்பு அல்ல.. கலாச்சாரம்’ கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த கௌரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியாவிற்கும் நமீபியாவிற்கும் இடையிலான நித்திய நட்புக்கு இது ஒரு சாட்சி. எங்கள் நட்பு அரசியலில் இருந்து பிறந்ததல்ல, போராட்டம், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையிலிருந்து பிறந்தது. இது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான கனவுகளால் வளர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும், வளர்ச்சிப் பாதையில் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு முன்னேறிச் செல்வோம்” என கூறினார்.
27 விருதுகளை பெற்ற பிரதமர் மோடி
இதுவரை பிரதமர் மோடி 27 உயரிய விருதுகளை பெற்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது 4 விருதுகளை பெற்றிருக்கிறார். அதாவது, பிரேசில், டிரினிடாட் & டொபாகோ, கானா, நமீபியா ஆகிய நாடுகளுக்கான உயரிய விருதுகளை பெற்றுள்ளார். முன்னதாக, இலங்கை, மொரிஷியஸ், குவைத், கயானா, நைஜீரியா, ரஷ்யா, அமெரிக்கா, பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.