AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Noble Prize 2026: 2026 வேதியியலுக்கான நோபல் பரிசு ஹென்றி ககன், கென்சோ சோவாய்க்கு அறிவிப்பு..

கடந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு சுசுமு கிடகவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஓமர் யாகி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. உலோகம்-கரிம கட்டமைப்புகள் (Metal-Organic Frameworks) எனப்படும் மூலக்கூறு கட்டமைப்புகளை உருவாக்கியதற்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. காலநிலை மாற்றம் மற்றும் நன்னீர் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்தக் கட்டமைப்புகள் உதவக்கூடியவை.

Noble Prize 2026: 2026 வேதியியலுக்கான நோபல் பரிசு ஹென்றி ககன், கென்சோ சோவாய்க்கு அறிவிப்பு..
வேதியியலுக்கான நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Oct 2026 18:03 PM IST

அக்டோபர் 7, 2026: 2026ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் ஹென்றி ககன் மற்றும் கென்சோ சோவாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில் (Asymmetric Organic Synthesis) நேரியல் அல்லாத விளைவுகள் (Non-linear Effects) மற்றும் தன்னூக்க வினையூக்கம் (Autocatalysis) தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசு வழங்கும் அமைப்பு புதன்கிழமை அறிவித்தது.

நோபல் பரிசு அறிவிப்பு வாரத்தில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழக்கமாக மூன்றாவது பரிசாக அறிவிக்கப்படும். இதற்கு முன்னதாக திங்கள்கிழமை மருத்துவத்திற்கான நோபல் பரிசும், செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டன.

வேதியலுக்கான நோபல் பரிசு:

இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு அடிப்படை வேதியியல் சார்ந்த முக்கிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுவதாக வேதியியலுக்கான நோபல் குழுவின் தலைவர் ஹெய்னர் லிங்கே தெரிவித்தார். பல மூலக்கூறுகள் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன என்றும், அவை ஒன்றுக்கொன்று கண்ணாடியில் தெரியும் பிம்பங்களைப் போன்றதாக இருந்தாலும் ஒரே மாதிரியானவை அல்ல என்றும் அவர் விளக்கினார். இத்தகைய மூலக்கூறுகள் ‘சிரல்’ (Chiral) மூலக்கூறுகள் என அழைக்கப்படுகின்றன. கிரேக்க மொழியில் ‘கை’ என்ற பொருளைக் கொண்ட சொல்லிலிருந்து ‘சிரல்’ என்ற பெயர் உருவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் நோபல் பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. உலகப் போர்களின் காலகட்டங்களில் சில இடைவெளிகள் ஏற்பட்டிருந்தாலும், தொடர்ந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தொழில்முறையில் வேதியியலாளரான ஆல்ஃபிரட் நோபல், குறிப்பாக டைனமைட் உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டினார். பின்னர் ஸ்வீடன் மத்திய வங்கியின் நிதியுதவியுடன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க:  2026 மருத்துவத்திற்கான நோபல் பரிசு: ஆப்டோஜெனெடிக்ஸ் ஆராய்ச்சிக்காக 3 விஞ்ஞானிகளுக்கு கவுரவம்

கடந்த ஆண்டு 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல்:

கடந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு சுசுமு கிடகவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஓமர் யாகி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. உலோகம்-கரிம கட்டமைப்புகள் (Metal-Organic Frameworks) எனப்படும் மூலக்கூறு கட்டமைப்புகளை உருவாக்கியதற்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. காலநிலை மாற்றம் மற்றும் நன்னீர் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்தக் கட்டமைப்புகள் உதவக்கூடியவை.

2026ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற ஹென்றி ககன் மற்றும் கென்சோ சோவாய் ஆகியோர் டிசம்பர் 10ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் ஸ்வீடன் மன்னர் கார்ல் 16ஆம் குஸ்டாஃப் அவர்களிடம் இருந்து பதக்கங்களைப் பெற உள்ளனர். ஆல்ஃபிரட் நோபல் மறைந்த தினமான டிசம்பர் 10ஆம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு – யார் இவர்?

விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து ஸ்டாக்ஹோம் நகர மண்டபத்தில் பிரம்மாண்ட விருந்து நடைபெறும். நோபல் பரிசு பெற்றவர்கள் மொத்தம் 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா, அதாவது சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் ஸ்வீடனில் வழங்கப்படாமல், தனியாக நார்வே தலைநகர் ஒஸ்லோவில் வழங்கப்படுகிறது.

Follow Us