AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துபாயில் பெட்ரோல் தொழிற்சாலை தாக்குதலில் 3 இந்தியர்கள் காயம்.. பிரதமர், வெளியுறவுத்துறை கடும் கண்டனம்!

Fujairah Petroleum Industries Zone In UAE | ஃபுஜிவாரா பெட்ரோல் தொழிற்சாலை மீது ஈரான் நடத்திய தாக்குதலுல் காரணமாக மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.

துபாயில் பெட்ரோல் தொழிற்சாலை தாக்குதலில் 3 இந்தியர்கள் காயம்.. பிரதமர், வெளியுறவுத்துறை கடும் கண்டனம்!
எண்ணெய் தொழில்ற்சாலை மீது தாக்குதல்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 May 2026 16:41 PM IST

புதுடெல்லி, மே 05 : துபாயில் (Dubai) உள்ள ஃபுஜிவாரா பெட்ரோல் தொழிற்சாலை (Fujairah Petroleum Industries) மீது ஈரான் நடத்திய தாக்குதலுல் காரணமாக மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் தாக்குதலில் இந்தியர்கள் காயமடைந்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளது. இந்த நிலையில், ஈரான் தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர்

அணு ஆயுதங்களை தயாரிப்பது தொடர்பாக இஸ்ரேல் (Israel) , அமெரிக்கா (America) மற்றும் ஈரான் (Iran) இடையே தொடர் மோதல்கள் நிலவி வருகிறது. இந்த மோதல்களின் ஒரு பகுதியாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இது தொடர்பாக அமெரிக்கா ஈரானுக்கு தொடர் மிரட்டல்கள் விடுத்து வந்த நிலையில், அவ்வப்போது போர் நிறுத்தங்களும் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், தற்போது மீண்டும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக தான் ஈரான், ஃபுஜிவாரா பெட்ரோல் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையும் படிங்க : நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து.. 20 பேர் பலியான சோகம்.. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்!

இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை

ஃபுஜிவாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பொதுமக்கள் இருக்கும் இடங்களையும், பொதுமக்களையும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஈரான் போர் மீதான விவாதம்.. பிரிக்ஸ் உலக நாடுகள் இடையே கருத்து வேறுபாடு!

கண்டனம் தெரிவித்த இந்திய பிரதமர் மோடி

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது அவர்கள் வசிக்கும் இடங்களின் மீது தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. துபாயில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளது குறித்து கடும் கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Follow Us