Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆசிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப்.. முக்கியத்துவம் என்ன?

American President Donald Trump's Asia Tour | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு செல்ல உள்ளார். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அவர் அதிபராக பதவியேற்ற நிலையில், தற்போது முதல் முறையாக அவர் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆசிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப்.. முக்கியத்துவம் என்ன?
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Oct 2025 08:26 AM IST

வாஷிங்டன், அக்டோபர் 26 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (American President Donald Trump) 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு (Asian Countries) வந்துள்ளார். மலேசியாவில் 3 நாட்கள் நடைபெற உள்ள ஆசியன் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் வந்துள்ளார். அதனை தொடர்ந்து சீனா (China), ஆப்ரிக்கா (Africa) உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்ய உள்ளார். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அவர் அதிபராக பதவியேற்ற நிலையில், தற்போது அவர் முதல் முறையாக ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்கிறார். இந்த நிலையில், டிரம்பின் ஆசிய நாடுகள் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆசிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக வந்துள்ள டிரம்ப்

2025, ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்றார். அது முதல் அவர் அங்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், டிரம்ப் முதல் முறையாக ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மலேசியாவில் நடைபெறும் ஆசியன் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் கோலாலம்பூருக்கு சென்றார். அவருக்கு மலேசிய அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஆசியன் மாநாட்டில் பங்கேற்க உள்ள டிரம்ப், அந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

இதையும் படிங்க : மனிதனுக்கு பன்றியின் கல்லீரல்: மருத்துவ உலகில் புதிய சாதனை!

ஜப்பானுக்கு செல்லும் டொனால்ட் டிரம்ப்

ஆசியன் மாநாட்டிற்கு செல்வதற்கு முன்னதாக டிரம்ப், கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையேயான சிக்கலை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட உள்ளார். அதனை தொடர்ந்து மலேசியாவில் இருந்து புறப்படும் டிரம்ப், ஜப்பானுக்கு செல்ல உள்ளார். அங்கு புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள சனே தகச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிறகு ஜப்பானில் இருந்து டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் செய்ய உள்ளார். அங்கு பசுபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.

இதையும் படிங்க : ரஷ்யாவுக்கு வேலைக்கு சென்ற இந்தியர்.. ராணுவத்தில் இணைக்கப்பட்ட கொடூரம்.. கண்ணீர் மல்க வீடியோ பதிவு!

வடகொரியா அதிபரை சந்திக்கும் டிரம்ப்?

சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார். இந்த நிலையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், கிம் ஜாங் உன் எனக்கு நல்ல நண்பர். அவரை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன். வாய்ப்பிருந்தால் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.