Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்திய மாணவர்களுக்கும், H-1B விசா வைத்திருப்பவர்களுக்கும் சிக்கல் – அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு

US Immigration Alert: இந்திய மாணவர்களுக்கும், H-1B விசா வைத்திருப்பவர்களும் பாதிக்கும் வகையில் அமெரிக்கா அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன் படி அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் அனுமதி இன்றி வேலை பார்த்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படால் என கூறப்படுகிறது.

இந்திய மாணவர்களுக்கும், H-1B விசா வைத்திருப்பவர்களுக்கும் சிக்கல் – அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு
டொனால்ட் டிரம்ப்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Sep 2025 20:37 PM IST

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அரசு அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்த புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இந்திய மாணவர்கள், H-1B விசாவுடன் பணிபுரிபவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டொனால்ட் டிரம்ப் கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். தற்போது அமெரிக்காவில் குடியுரிமை முறைகளில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வருமானவரி பதிவுகள் மூலம் கண்காணிப்பு

அமெரிக்க வருமானத்துறை மற்றும் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை இணைந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் வருமான விவரங்களை பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளது. மேலும் F-1 மாணவர் விசா வைத்திருப்பவர்கள் படிப்புடன் சேர்ந்து அனுமதி இல்லாமல் வேலை செய்தாலோ, அல்லது H-1B விசா வைத்திருப்பவர்கள் தங்கள் பணிபுரியும் நிறுவனத்தை தவிர, வேறு இடங்களில் அனுமதியின்றி பணியாற்றினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது போன்ற கூடுதல் வருமானங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்காவிட்டால் வரி ஏய்ப்பு செய்ததாக கருதப்படும். 

இதையும் படிக்க : தங்கம் உற்பத்தியில் தடுமாறும் அமெரிக்கா.. இந்த நாடுகள்தான் டாப் லிஸ்ட்!

நாடுகடத்தல் மற்றும் பிற நடவடிக்கைகள்

தங்கள் வருமானம் குறித்து பதிவு செய்யாத H-1B விசா வைத்திருப்போருக்கு ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து அமெரிக்க அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி தங்கள் வருமானத்தை மறைக்கும் நபர்களுக்கு விசா நீட்டிப்பு மறுப்பு, அமெரிக்காவில் நுழைய தடை, நாடு கடத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர், ஜாத் ஷாவ் தெரிவித்ததாவது, வருமான வரித்துறை அமெரிக்காவில் குடியேறியவர்களின் அனைத்து தகவல்களையும், அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை வழங்கியுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் கடந்த காலங்களில் உணவகத்தில் பணி போன்ற சிறிய வேலைகளை செய்திருந்தாலும், தற்போது அவை குற்றச்செயல்களாக கருதப்படுகின்றன.  மேலும் போக்குவரத்து விதி மீறலில் பிடிபட்டாலும் அவர்களின் வருமான விவரங்கள் , வேலை போன்ற அனைத்து தகவல்களும் விசாரிக்கப்படும். 

இதையும் படிக்க : இந்தியா மீதான வரி ரத்தாகுமா? நீதிமன்றம் போட்ட தீர்ப்பு… கொதித்தெழுந்த டிரம்ப்!

தற்போது இந்த கடுமையான நடவடிக்கை தொடங்கப்படவில்லை என்றும் எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகள் தீவிரமடையலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவில் மாணவர் விசாவில் இருப்பவர்கள் அனுமதி இல்லாமல் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும்  H-1B விசா வைத்திருப்பவர்கள், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தை தவிர வேறு இடங்களில் வேலை செய்தால் அது குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் நிபணர்கள் எச்சரிக்கின்றனர்.