Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உலகின் மிகச்சிறிய கார் – டிரைவர் எப்படி இந்த காரை ஓட்டுவார்? – வைரலாகும் வீடியோ

Banana Peel Car : உலகின் மிகச்சிறிய காரை தைவான் உருவாக்கியுள்ளது. இந்த கார் பார்ப்பதற்கு வாழைப்பழ தோல் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இந்த காரை பனானா பீல் கார் என அழைக்கின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் இந்த கார் வைரலாகி வருகிறது.

உலகின் மிகச்சிறிய கார் – டிரைவர் எப்படி இந்த காரை ஓட்டுவார்?  – வைரலாகும் வீடியோ
உலகின் மிகச் சிறிய கார்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 29 May 2025 17:18 PM

உலகத்தில் இதுவரை உருவாக்கப்பட்ட கார்கள் அனைத்தையும் விட, மிகக் குறைந்த உயரத்தில் இயங்கும் ஒரு காரை தைவான் (Taiwan) நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த கார் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட ஹோண்டா சிவிக் ஆகும். வாழைப்பழ தோல் போன்ற தோற்றத்தில் இருப்பதனால் இந்த காருக்கு பனானா பீல் கார் (Banana Peel Car) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த காரை ஸ்டான்ஸ் கராஜ் தைவான் (Stance Garage Taiwan ) குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை லான் டொங் என்பர் வழி நடத்தி வருகிறார். இந்த கார் பொதுவாக சாலைகளில் ஓடுவதற்காக வடிவமைக்கப்படவில்லை.  கண்காட்சிகளில் வைக்கப்படுவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் தற்போது உலக அளவில் கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த காரை டிரைவர் எப்டி ஓட்டுவார்?

 

 

View this post on Instagram

 

A post shared by Luxury (@luxury)

இந்த காரை ஓட்ட, டிரைவர் வழக்கமான இருக்கையில் அமர முடியாது. அவர் முழுமையாக படுத்த நிலையில் கேமராக்களின் உதவியால் வாகனத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதில் வழக்கமான கார்களில் இருக்கும் ஸ்டியரிங் அல்லது பெடல்ஸ் எதுவும் இருக்காது. தரையுடன் சில மில்லிமீட்டர் உயரத்தில் மட்டும் ஓடக்கூடிய இந்த வாகனம், வீடியோ கேம்களில் பார்ப்பதுபோல இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனற்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் உலகில் உயரம் குறைவான கார்

 

 

View this post on Instagram

 

A post shared by Luxury (@luxury)

இந்த காரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் அதனைப் பாராட்டி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் சிலர்  இந்த கார்ல எப்படி உட்காருவது? டிரைவர் நிச்சயம் 2 – 3 அடி உயரம் தான் இருப்பார். பாதி தான் இருக்கு மீதி எங்க என்பது போல தங்களது ஆச்சரியங்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.  பெரும்பான்மையான மக்களிடையே இந்த கார் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்த உலகின் மிகச்சிறிய கார்

கடந்த 2023 ஆம் ஆண்டு, இத்தாலியில் உள்ள கார்மேகெடான்( Carmagheddon)  நிறுவனம், ஃபியாட் பாண்டா காரை  உலகின் மிகக் குறைந்த உயரம் கொண்ட காராக மாற்றியமைத்தது. அது கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டில் இடம்பெற்றது. ஆனால் தற்போது, பனானா பீல் காரின் வடிவமைப்பு அதை விட குறைந்த காராக மக்களால் அடையாளம் காணப்படுகிறது. வழக்கமான பயன்பாடுகளுக்கா இந்த கார் வடிவமைக்கப்படவில்லை எனவும், மக்களின் பார்வைக்காக ஒரு முன் மாதிரி காராக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90ஸ் கிட்ஸின் சூப் சாங்... காதல் கசக்குதையா உருவான கதை தெரியுமா?
90ஸ் கிட்ஸின் சூப் சாங்... காதல் கசக்குதையா உருவான கதை தெரியுமா?...
பாகிஸ்தானில் 90 நாட்கள்.. உளவு பார்த்த நபர் அதிரடி கைது!
பாகிஸ்தானில் 90 நாட்கள்.. உளவு பார்த்த நபர் அதிரடி கைது!...
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!...
எலிமினேட்டரில் வெளியேறும் அணி எது..? மும்பை - குஜராத் இன்று மோதல்
எலிமினேட்டரில் வெளியேறும் அணி எது..? மும்பை - குஜராத் இன்று மோதல்...
சூடாகும் உலகம்.. நிலச்சரிவில் புதைந்த சுவிட்சர்லாந்து கிராமம்!
சூடாகும் உலகம்.. நிலச்சரிவில் புதைந்த சுவிட்சர்லாந்து கிராமம்!...
மாணவர்களுக்கு விருது விழா.. பரிசுகளை வழங்கும் விஜய்!
மாணவர்களுக்கு விருது விழா.. பரிசுகளை வழங்கும் விஜய்!...
பள்ளிகளில் செவ்வாய் கிழமைகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு!
பள்ளிகளில் செவ்வாய் கிழமைகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு!...
சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா?
சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா?...
8 பேரை பலிவாங்கிய பல் சிகிச்சை.. 2 வருடம் கழித்து வெளியான ஷாக்!
8 பேரை பலிவாங்கிய பல் சிகிச்சை.. 2 வருடம் கழித்து வெளியான ஷாக்!...
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்... கொட்டப்போகும் மழை
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்... கொட்டப்போகும் மழை...
கொரோனாவின் இந்த மோசமான அறிகுறிகள் தற்போது இல்லை - காரணம் என்ன?
கொரோனாவின் இந்த மோசமான அறிகுறிகள் தற்போது இல்லை - காரணம் என்ன?...