AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Iran Vs America : ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா.. டிரம்ப் அறிவிப்பு!

America Attacked 3 Nuclear Plants in Iran | ஈரான் - இஸ்ரேல் விவகாரத்தில் தொடர்ந்து அமெரிக்கா தலையிட்டு வருகிறது. இதற்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை தெரிவித்து வந்தன. இந்த நிலையில், ஈரானின் மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது.

Iran Vs America : ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா.. டிரம்ப் அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Jun 2025 08:38 AM IST

ஈரான், ஜூன் 22 : ஈரான் மீதான தாக்குதல் (Attack On Iran) தொடர்ந்தால் இன்னும் பேரழிவு தரும் தாக்குதல் நடத்தப்படும் என்று அதன் அதிபர் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐ.நா (UN – United Nations) பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த நிலையில், ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது ஈரான் – இஸ்ரேல் போரின் தீவிரம் மேலும் வலுவடைந்துள்ளது. மேலும், ஈரான் அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தும் பரபரப்பான சூழலும் உள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையே நீடிக்கும் கடும் மோதல்

ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் அச்சுறுத்தல் தரும் விதமாக உள்ளதாக கூறி ஜுன், 13 2025 முதல் ஈரான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்கதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நெல் வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்ரேலுக்கு ஆதராவாக போரில் இறங்கிய அமெரிக்கா

ஈரான் – இஸ்ரேல் இடையே கடும் மோதல் நிலவி வந்த நிலையில், ஈரான் தலைநகரின் இருந்து மக்கள் வெளியேறும்படி இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கின. இந்த நிலையில், அமெரிக்காவும் ஈரானுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப் ஈரானின் பர்தவ், நடான்ஸ், மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான் அதிபர்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு பதில் அளித்துள்ள ஈரான், தாக்குதல் தொடர்ந்தால் இன்னும் பேரழிவு தரும் தாக்குதல் நடத்தப்படும் என்று அதன் அதிபர் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எங்கள் அமைதியான அணுசக்தி திட்டம் குறித்து நம்பிக்கை வளர்க்க மற்றவர்களுடன் பேசவும், பணியாற்றதும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் அணுசக்தி நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்த நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இஸ்ரேல் எங்களை தொடர்ந்து தாக்கினால் எங்கள் பதில் இன்னும் அழிவுகரமானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us