Viral Video : வானை பிளந்துக்கொண்டு பயங்கர சத்ததுடன் தாக்கிய மின்னல்.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய இளைஞர்கள்!

Lightning Strikes Kabaddi Game | மழையின் போது மின்னல் தாக்கும் என்பதால் வெளியே செல்ல வேண்டாம் என கூறுவார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் மழையில் கபடி விளையாடிக்கொண்டு இருக்கும் நிலையில், திடீரென மின்னல் தாக்கியதால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர்.

Viral Video : வானை பிளந்துக்கொண்டு பயங்கர சத்ததுடன் தாக்கிய மின்னல்.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய இளைஞர்கள்!

வைரல் வீடியோ

Published: 

02 Sep 2025 22:38 PM

உலகம் முழுவதும் நடைபெறும் பல வகையான சுவாரஸ்ய சம்பவங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சில விஷயங்கள் எல்லாம், அந்த வீடியோக்கள் இல்லை என்றால் நம்பவே முடியாத அளவுக்கு ஆச்சர்யமூட்டும் விதமாக இருக்கும். தற்போது அத்தகைய வீடியோ ஒன்று தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) சில இளைஞர்கள் கபடி விளையாடிக்கொண்டு இருக்கும் நிலையில், வானை பிளந்துக்கொண்டு பயங்கர சத்ததுடன் மின்னல் வெட்டும் வீடியோ தான் அது. தற்போது அந்த வீடியோ மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

வானை பிளந்துக்கொண்டு பயங்கர சத்ததுடன் தாக்கிய மின்னல்

உத்தர பிரதேசத்தின் பாஸ்டி பகுதியில் மாலை நேரத்தில் இளைஞர்கள் சிலர் கபடி விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது வானை பிளந்துக்கொண்டு மின்னல் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : பாராகிளைடிங் செய்துக்கொண்டே DJ போட்ட இளம் பெண்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர்கள் சிலர் கபடி விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது லேசாக மழை பெய்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், அவர்கள் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து விளையாடுகின்றனர். அப்போது திடீரென வானை பிளந்துக்கொண்டு மின்னல் தாக்குகிறது. அதனை பார்க்கும் அங்கிருந்து தலைதெரிக்க ஓடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : தோஸ்த் படா தோஸ்த்…. 55 ஆண்டுகளாக நண்பனை பிரியாத யானை – வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.