Viral Video : 30 நொடிகளில் பலரை கடித்து குதறிய நாய்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
Dog Attacked Group Of Men One | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், நாய் ஒன்று 30 நொடிகளில் இளைஞர்கள் சிலரை கடித்து குதறும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்தியாவில் தெரு நாய்கள் தொடர்பான சிக்கல்கள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில தரப்பினரும், அவற்றை சுதந்திரமாக விட வேண்டும் என்றும் சில தரப்பினரும் கூறி வருகின்றனர். இதற்கிடையே நாய்களால் குழந்தைகள், முதியவர்கள் என மனிதர்களை பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், தெரு நாய் ஒன்று சில ஆண்களை கடித்து குதறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
30 நிமிடங்களில் பலரை கடித்து குதறிய நாய்
தெரு நாய்கள் மனிதர்களை தாக்குவது தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்கள் தெரு நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மேலும் மேலும் வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக உள்ளன. அந்த வகையில், தெரு நாய் ஒன்று 30 நொடிகளில் பலரை கடித்து குதறும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : மாதம் ரூ.75,000 சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
How a dog turns dangerous when infected with rabies will send chills down your spine.
A single dog attacked and bit multiple youths in under 30 seconds.
Imagine if they had been kids.https://t.co/hsd1BotNUB
— Manu🇮🇳🇮🇳 (@mshahi0024) April 4, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சில இளைஞர்கள் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அங்கு நாய் ஒன்று வருகிறது. அது திடீரென அங்கிருக்கும் இளைஞர்களை கடிக்கிறது. அவர்கள் கைகளில் கிடைக்கும் பொருட்களை எடுத்து நாயை விரட்டி தங்களை தற்காத்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால், அந்த நாயோ தொடர்ந்து அவர்களை கடிக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : பயணியை மது வாங்கிவர கூறிய ஊபர் ஆட்டோ ஓட்டுநர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.