
Spiritual Experience
ஆன்மீகம் என்பது பற்றி பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கும். அது ஆன்மாவுடன் தொடர்புடையது, கடவுளைத் தேடும் வழி, வாழ்வின் பொருள் மற்றும் நோக்கத்தை அறிவதற்கான ஒரு தனிப்பட்ட தேடல் என பல வகைகளில் பொருள் கூறப்படுகிறது. அடிப்படையில் ஆன்மிகம் என்பது ஒரு மத நம்பிக்கை என கொள்ளலாம். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு உலகைப் பற்றியது என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு வருகிறது. கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை, கடவுள் நம்மிடையே இருக்கிறார் என பல வகையான கருத்துக்கள் ஆன்மீகத்தில் உள்ளது. உலகின் வாழும் ஒவ்வொரு மக்களும் தாங்கள் சார்ந்த மதத்தை தாண்டி மற்ற மதங்களின் கடவுள்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டுள்ளனர். பல சமயங்களின் கடவுளின் சக்தியையும் உணர்ந்துள்ளனர். அப்படியாக சமூகத்தில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பிரபலங்கள் தங்களுடைய ஆன்மீக அனுபவங்களை பற்றி தெரிவித்துள்ளார்கள். அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
Vaali: பிறப்பால் வைஷ்ணவர்.. தீவிர முருக பக்தராக வாலி மாறிய கதை!
Lord Murugan: கவிஞர் வாலி, வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர் என்றாலும், தனது சகோதரியின் மரணத்தின் விளிம்பில் இருந்த நேரத்தில் முருகன் பக்தரானார். திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சகோதரிக்கு ஒரு மருத்துவர் அளித்த சிகிச்சையால் அவர் குணமடைந்தார். இந்த அதிசய நிகழ்வு வாலியை முருகன் பக்தனாக்கியது.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 12, 2025
- 13:57 pm
சபரிமலை ஐயப்பனால் நிகழ்ந்த அற்புதம்.. நடிகர் ராஜ்கமலின் ஆன்மிக அனுபவம்!
பிரபல நடிகரான ராஜ்கமல் சபரிமலைக்கு முதல்முறையாக சென்ற அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அபியும் நானும் சீரியலில் மாலை அணிந்த காட்சியின் மூலம் ஏற்பட்ட ஆன்மீக உணர்வு, விரதம் இருப்பதில் ஏற்பட்ட சந்தேகம், நண்பர்களின் ஊக்கம், 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட அனுபவம் என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 21, 2025
- 11:35 am
சீரடியில் சாய்பாபா நிகழ்த்திய அதிசயம்.. போஸ் வெங்கட் பகிரும் அனுபவங்கள்!
நடிகர், இயக்குனர் போஸ் வெங்கட் தனது ஆன்மீக அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். சாய்பாபா மீதான அவரது அசாத்தியமான நம்பிக்கையும், சீரடி கோவிலில் நிகழ்ந்த அற்புதங்களையும் விவரித்துள்ளார். திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த போஸ் வெங்கட், ஆன்மீகம் தனக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 20, 2025
- 15:20 pm
ஜோதிடம் என்பது உண்மை.. நடிகர் ராஜேஷின் ஆன்மிக அனுபவங்கள்!
நடிகர் ராஜேஷ் ஜோதிடத்தில் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியிருப்பார். தனக்கு பதினோரு வயதில் ஜோதிடத்தில் நம்பிக்கை ஏற்பட்டது எப்படி என்றும், அவரது வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் ஜோதிடத்தின் தாக்கம் பற்றிய தகவல்களையும் அதில் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றிக் காண்போம்.
- Petchi Avudaiappan
- Updated on: May 16, 2025
- 12:43 pm
M.N.Nambiar: 300 முறை சபரிமலை பயணம்.. நம்பியாரின் பக்தி.. பேரன் பகிரும் ஆச்சரிய தகவல்!
நம்பியாரின் பேரன் தீபக் நம்பியார், தனது தாத்தாவின் சபரிமலை பயண அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். 7 வயதில் முதல் பயணத்தின் அனுபவங்கள், நம்பியாரின் அமைதி, தியானத்தின் முக்கியத்துவம், 300க்கும் மேற்பட்ட சபரிமலை பயணங்கள், சபரிமலைக்கு நம்பியாருடன் வருகை தந்த பிரபலங்கள் என பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 13, 2025
- 11:36 am
திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்த ஆச்சரியம்.. நடிகை சாந்தினி நெகிழ்ச்சி!
நடிகை சாந்தினி அவர்களின் ஆன்மீக அனுபவங்கள் பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். . தீவிர சிவ பக்தையான அவர் திருவண்ணாமலை கிரிவலத்தில் ருத்ராட்சம் பெற்ற அனுபவம், நாடோடிகள் படப்பிடிப்பின் போது ஆஞ்சநேயர் கோயில் சென்றது போன்ற அதிசயங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது வாராந்திர வழிபாட்டு முறைகள் பற்றியும் பேசியுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 9, 2025
- 15:08 pm
முருகன் அருளால் நடந்த மறக்க முடியாத சம்பவம்.. சுஜாதா பகிரும் தகவல்கள்!
நடனக் கலைஞர் மற்றும் நடிகை சுஜாதா, தனது ஆன்மிக அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் சமயபுரம் மாரியம்மன் மற்றும் முருகனை தனது இஷ்ட தெய்வங்களாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றவர்களுக்கு உதவுவதை ஆன்மிகமாகக் கருதுவதாகவும், பக்தி என்பது அடுத்தவரை குறை சொல்லாமல் இருப்பது எனவும் கூறியுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 7, 2025
- 09:46 am
முருகனை நாடும் இளம் வயதினர்.. ஆன்மிக அனுபவங்களைப் பகிரும் வேல்முருகன்!
பிரபல பாடகர் வேல்முருகன் தனது ஆன்மீக அனுபவங்களைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். தைப்பூச நாளில் பிறந்த அவர், முருகனின் அருளால் இசைத்துறையில் பாடகராக வெற்றி பெற்றதாகவும், சமீபகாலமாக முருகன் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்
- Petchi Avudaiappan
- Updated on: May 7, 2025
- 09:46 am
வாழ்க்கையை மாற்றிய ரமண மகரிஷி.. நடிகர் வெங்கடேஷின் ஆன்மிக அனுபவம்!
பிரபல நடிகரான வெங்கடேஷ் டகுபதி ஆன்மீகப் பயணம், கடவுள் மீதான பயத்திலிருந்து அமைதி நோக்கிய ஒரு மாற்றத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில், பாரம்பரியமான ஆன்மீக நம்பிக்கைகளைக் கொண்டிருந்த அவர், பின்னர் ஓஷோ, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, கடவுளின் மற்றொரு பரிணாமத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 7, 2025
- 09:47 am
எந்த கடவுளையும் தொல்லை செய்வது இல்லை.. வடிவுக்கரசியின் ஆன்மிக அனுபவம்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான வடிவுக்கரசி தனது வாழ்வில் பல்வேறு ஆன்மீக அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் திருப்பதி யாத்திரை, சத்யநாராயண பூஜை, பாண்டிச்சேரி அன்னை வழிபாடு, கிறிஸ்துவம் குறித்த அவரது பார்வை உள்ளிட்டவை பற்றி தெரிவித்துள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 7, 2025
- 09:47 am
மூகாம்பிகை தான் எல்லாம்.. இளையராஜாவின் ஆன்மிக அனுபவம்!
இசைஞானி இளையராஜா 1974ல் மைசூரில் இசைக்கச்சேரிக்குச் சென்றபோது ஏற்பட்ட கடுமையான காய்ச்சலில் இருந்து மூகாம்பிகை அம்மனின் அருளால் மீண்டதையும், கோயிலில் நடந்த அதிசயமான நிகழ்வுகளையும் நேர்காணலில் ஒன்றில் தெரிவித்துள்ளார். மூகாம்பிகை அம்மன் தனது சன்னதியில் என்னைப் பாட வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: Jun 15, 2025
- 08:06 am
Actress Lakshmi: கனவில் வந்த மாரியம்மன்.. நடிகை லட்சுமி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!
பிரபல தமிழ் நடிகை லட்சுமி அவர்கள் தனது ஆன்மீக அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். மீண்டும் மீண்டும் வந்த ஒரு விசித்திரமான கனவில், அவர் ஒரு பிரசாதத்தைப் பெற்று, ஒரு கோவிலுக்குச் செல்லும்படி வழிநடத்தப்படுகிறார். கனவில் வந்த கோவிலைப் பின்னர் அடையாளம் கண்டு சென்று வழிபட்டதாக கூறியுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 7, 2025
- 09:48 am
கர்வத்தால் திருப்பதியில் நடந்த சம்பவம்.. டிரம்ஸ் சிவமணியின் ஆன்மிக அனுபவம்!
இசைத்துறையில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கும் டிரம்ஸ் சிவமணி தன்னுடைய ஆன்மிக அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் திருப்பதி கோயிலுக்கு தான் சென்றபோது நடந்த நிகழ்வுகளையும், தன்னிடம் இருந்த கர்வம் ஒழிந்தது பற்றியும் பிரமிப்புடன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாபாஜியிடம் வேண்டியது நடந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 7, 2025
- 09:49 am
பிரம்ம முகூர்த்த கடவுள் வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!
பிரபல சின்னத்திரை நடிகை பிரீத்தி சஞ்சீவ் தன்னுடைய ஆன்மீக அனுபவங்கள் மற்றும் வீட்டு வழிபாட்டு முறைகள் குறித்த நேர்காணலில் கருத்துகளை பகிர்ந்துள்ளார். வாஸ்து, பிரம்ம முகூர்த்த வழிபாடு, விளக்கு ஏற்றுதல் போன்றவற்றின் முக்கியத்துவம், நம்பிக்கை மற்றும் பாசிட்டிவ் எண்ணங்களின் பங்கு ஆகியவற்றை அவர் பேசியுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 7, 2025
- 09:49 am
Sai Baba: வீட்டிலேயே சாய்பாபா வழிபாடு.. அனிதா குப்புசாமி சொல்லும் டிப்ஸ்!
அனிதா குப்புசாமி அவர்கள் சாய்பாபா பற்றிய தனது ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அரசியலில் ஈடுபட தடுத்த சாய்பாபாவின் தலையீடு, சாய்பாபா வழிபாட்டு முறைகள், சிறந்த நேரம், மஞ்சள் நிறத்தின் முக்கியத்துவம் மற்றும் லட்சுமி குபேர பூஜையின் நன்மைகள் போன்றவற்றைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
- Petchi Avudaiappan
- Updated on: May 7, 2025
- 09:52 am