WhatsApp Username வசதி – இனி மொபைல் எண் இல்லாமல் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பலாம்!

WhatsApp Username : வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்காக யூசர்நேம் (Username) என்ற வசதியை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இதன் மூலம் ஒருவருக்கு மொபைல் எண் இல்லாமல் மெசேஜ் அனுப்ப முடியும். இதனால் புதிய நபர்களுடன் பாதுகாப்பாக உரையாடும் வசதியை வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு அளிக்கிறது. இந்த கட்டுரையில் வாட்ஸ்அப் யூசர்நேம் எப்படி செயல்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

WhatsApp Username வசதி – இனி மொபைல் எண் இல்லாமல் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பலாம்!

மாதிரி புகைப்படம்

Published: 

03 Jun 2025 17:28 PM

வாட்ஸ்அப் என்பது தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமல்லாமல் தொழில் சார்ந்தும் வாட்ஸ்அப் பயன்படுத்தும் தேவை இருக்கிறது. இந்த நிலையில் நாம் புதிதாக ஒருவருக்கு தொழில் சார்ந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புகிறோம் என்றால் நமது மொபைல் எண்ணும் அவருக்கு காட்டப்படும். இதில் பிரைவசி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை போக்க வாட்ஸ்அப் பதிய முறையை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் படி இனி உங்கள் மொபைல் எண்ணை பகிராமல் ஒருவருடன் சாட் செய்யும் வசதியை வாட்ஸஅப் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இதற்காக வாட்ஸ்அப் புதிய யூசர்நேம் அம்சத்தை கொண்டுவரவுள்ளது. தி எகனாமிக்ஸ் டைம்ஸில் வெளியான கட்டுரையின் படி வாட்ஸ்அப் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

WhatsApp Username என்றால் என்ன?

யூசர்நேம் என்பது என்பது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ளது போல, உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கு ஒரு தனித்துவமான அடையாளமாக செயல்படும். இதை பயன்படுத்தி, மற்றவர்கள் உங்கள் மொபைல் எண்ணைத் தெரியாமல், நேரடியாக உங்களைத் தொடர்புகொள்ள முடியும். அதே போன்ற வசதி ஏற்கனவே டெலிகிராம், சிக்னல் போன்ற மெசேஜிங் ஆப்ஸ்களில் உள்ளது. இப்போது வாட்ஸ்அப்பிலும் இது அறிமுகப்படுத்தப்படவிருப்பதால் பயனர்களின் மொபைல் எண் போன்ற தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும்.

வாட்ஸ்அப் யூசர்நேம் எப்படி வேலை செய்யும்?

பிரைவேசிக்கு முக்கியத்துவம்

வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு ஏற்கனவே end-to-end encryption கொண்டு பாதுகாப்பாக மெசேஜ் செய்ய அனுமதிக்கிறது. தற்போது வாட்ஸ்அப்பின் புதிய யூசர்நேம் அம்சம் பயனர்கள் தங்களது மொபைல் எண்ணை ஒருவருக்கு பகிராமல் சாட் செய்ய முடியும் இதனால் அவர்களது பிரைவசி பாதுகாக்கப்படும். குறிப்பாக கடைகள், விற்பனை பிரதிநிதிகள் போன்று தொழில் சார்ந்து பயன்படுத்துபவர்களுக்கு இந்த யூசர் நேம் முறை மிகவும் பலனளிக்கும். இதன் மூலம் தேவையில்லாமல் அவர்கள் தங்கள் மொபைல் எண்ணை பகிராமல் ஒருவருடன் உரையாடலாம்.