UPI : யுபிஐ-ல் வருகிறது ஏஐ.. இனி இந்த சிக்கல்களுக்கு சுலபமாக தீர்வு காணலாம்!
UPI Help with AI in UPI | யுபிஐ செயலியை மேலும் விரைவானதாக மாற்ற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், யுபிஐ-ல் செயற்கை நுண்ணறிவு அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்திய மக்களிடையே யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் நிலையில், அதில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், யுபிஐ-ல் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை (AI – Artificial Intelligence) அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே யுபிஐ அதிவிரைவாக செயல்படும் நிலையில், அதில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தீர்த்து வைக்கும் வகையில் யுபிஐ ஹெல்ப் (UPI Help) என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அன்றாட வாழ்வில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் யுபிஐ
தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் யுபிஐ செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் கையில் பணத்தை வைத்து செலவு செய்வதை விடவும், யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். அதாவது ரூ.1 முதல் அவர்கள் யுபிஐ-ல் பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். பண பரிவர்த்தனை மேற்கொள்வது மிக எளிதானதாக இருந்தாலும், அதில் சில சிக்கல்களும் உள்ளனன.
இதையும் படிங்க : Realme GT 8 Pro : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி ஜிடி 8 ப்ரோ!
யுபிஐ-ல் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள்
என்னதான் யுபிஐ மிகவும் பயனுள்ளதாகவும், விரைவானதாகவும் இருந்தாலும் அதில் சில சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக ஒருவருக்கு பணம் அனுப்ப முடியாமல் போவது. பணம் அனுப்பும்போது அனுப்பும் நபரின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு பெறும் நபரின் வங்கி கணக்கிற்கு செல்லாமல் இருப்பது, பணம் அனுப்பும்போது அப்படியே நிற்பது என பல விதமான சிக்கல்களை பயனர்கள் சந்திக்கின்றனர். இந்த சிக்கல்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில் தான் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் தொல்லை கொடுக்கும் ஸ்பேஸ் மெசேஜ்கள்.. புதிய தீர்வை அறிமுகம் செய்யும் மெட்டா!
யுபிஐ ஹெல்ப் அம்சம் – சிறப்புகள் என்ன என்ன?
யுபிஐ செயலிகளை பயன்படுத்தும்போது ஏற்படும் சந்தேகங்கள், மேற்கொள்ளப்பட்ட பண பரிவர்த்தனை முழுமையானதா, இல்லையா, இல்லை என்றால் அது குறித்து எப்படி புகார் அளிப்பது, அந்த பணம் மீண்டும் வங்கி கணக்குக்கு ரீஃப்ண்ட் செய்யப்பட்டதா, இல்லை என்கிற சந்தேகங்களுக்கு உடனடி பதில் அளிக்கவும், பயனர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு வழங்கவும் இந்த அம்சம் பிரதானமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சத்தை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சோதனை செய்து வரும் நிலையில், விரைவில் அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.