சாட்ஜிபிடியிடம் இந்த கேள்விகளை கேட்காதீங்க – காத்திருக்கும் ஆபத்து!

Stay Safe with ChatGPT : சாட்ஜிபிடி உட்பட ஏஐ கருவிகள் உங்கள் வேலையை எளிதாக்கக்கூடும், ஆனால் இந்தக் கருவிகளை குருட்டுத்தனமாக நம்புவது உங்களை ஆபத்தில் சிக்க வைக்கலாம். இந்த கட்டுரையில் சாட்ஜிபிடியிடம் கேட்கக்கூடாத கேள்விகள் குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் ஆபத்து குறித்தும் பார்க்கலாம்.

சாட்ஜிபிடியிடம் இந்த கேள்விகளை கேட்காதீங்க - காத்திருக்கும் ஆபத்து!

மாதிரி புகைப்படம்

Published: 

30 Jun 2025 18:52 PM

 IST

ஏஐ (AI) கருவிகளின் வருகை நம் வேலைகளை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. அனைத்து வேலைகளுக்கும் ஏஐயிடம்  யோசனை கேட்டபிறகே செய்கிறோம். சிக்கலான நேரங்களில் உங்களது பிரச்னைகளுக்கு தீர்வை வழங்குகிறது.  ஆனால் ஏஐ கருவிகளை குருட்டுத்தனமாக நம்புவது உங்களை ஆபத்தில் சிக்கவைக்கும்.  சாட்ஜிபிடி (Chatgpt) போன்ற ஏஐ கருவிகள் ஒவ்வொரு முறையும் சரியான ஆலோசனையை  வழங்குகின்றன. ஆனால் சில கேள்விகளை கேட்பது நமக்கே ஆபத்தாக முடியலாம். இந்த கட்டுரையில் ஏஐ கருவிகளிடம் கேட்கக் கூடாத கேள்விகளையும் அதற்கு பின்னணியில் உள்ள காரணங்களையும் விவரமாக பார்க்கலாம்.

முதலீட்டு ஆலோசனைகளை கேட்க வேண்டாம்

நீங்கள் பங்குச் சந்தையிலோ அல்லது வேறு ஏதாவது முதலீட்டு திட்டங்களில், சாட்ஜிபியிடமிருந்து ஆலோசனை பெற நினைத்தால், கவனமாக இருங்கள். ஏனெனில் ஏஐயின் ஆலோசனை உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். காரணம் அதற்கு மனிதர்களைப் போல லாஜிக்காக யோசிக்க தெரியாது. தரவுகளை வைத்து மட்டுமே முடிவெடுக்கும்.  எனவே முதலீட்டைப் பொறுத்தவரை, ஏஐயிடம் ஆலோசனை பெறுவதற்குப் பதிலாக, நீங்களே ஆராய்ச்சி செய்து பின்னர் முடிவெடுப்பது நல்லது, இல்லையெனில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும்.

மருத்துவ ஆலோசனை

சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் நிபுணர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஏஐயிடம் இருந்து மருத்துவ ஆலோசனைகள் பெறுவது நமக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்ததலாம். காரணம் உங்களது அறிகுறிகள்,  ஏதாவது நோயோடு பொருந்தினால் அந்த நோய் உங்களுக்கு இருப்பதாக சொல்லும். அது மருத்துவர்களைப் போல பிரத்யேகமாக தீர்வைத் தராது. ஒரு புரிதலுக்காக வேண்டுமானால் அதனிடம் கேட்கலாம். ஆனால் மருத்துவ ஆபத்துகள் கேட்பது தவறு. ஏனெனில் ஏஐயின் மருத்துவ உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். உங்கள் நோய்க்கு சிகிச்சைப் பெற மருத்துரிடம் செல்வதே சிறந்தது.

சட்ட ஆலோசனை

நீங்கள் ஒரு சட்ட விஷயத்தில் சாட்ஜிபிடி அல்லது ஏஐ கருவிகளின் உதவியைப் பெற நினைத்தால்,  அதன் கருத்துக்கள்  தவறாக இருக்கலாம். இதனால் நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும். ஏஐ கருவிகள் வழக்கறிஞர்கள் போல செயல்படாது. ஒரு வழக்கறிஞர், வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்களைப் பெற, உங்களிடம் சில பிரத்யேக கேள்விகளை கேட்டு அதற்கு தீர்வு சொல்வார். ஏஐ கருவிகளால் அது போல செயல்பட முடியாது. சட்ட விஷயங்களில், நேரடியாக ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெற வேண்டும், ஏனெனில் இந்த விஷயத்தில் ஏஐ கருவிகளை மட்டும் நம்பியிருப்பது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும்.

தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்

சில காலங்களுக்கு முன்பு கிப்லி புகைப்படங்கள் டிரெண்டான போது, மக்கள் ​​அனைவரும், போட்டோ போன்ற தங்கள் தனிப்பட்ட படங்களை சாட்ஜிபிடியில் பதிவேற்றத் தொடங்கினர். ஏஐ உங்களுக்காக கிப்லி படத்தை உருவாக்கியது. ஆனால் இதில் உங்கள் முக அடையாளம் அதனிடம் கொடுப்பது ஆபத்து. அது இன்றில்லை என்றாலும் எதிர்காலத்தில் பெரும் தீங்கு விளைவிக்கும்.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..