ஸ்னாப்சாட்டை போலவே இன்ஸ்டாவில் வரும் புகைப்பட அம்சம்.. 24 மணி நேரம் மட்டுமே இருக்கும்!

New Feature To Be Introduced In Instagram | ஸ்னாப்சாட்டில் உள்ளதை போலவே இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுதான் இன்ஸ்டன்ட்ஸ். இந்த அம்சத்தில் 24 மணி நேரத்திற்கு மட்டுமே இருக்கும் புகைப்படங்களை அனுப்ப முடியும்.

ஸ்னாப்சாட்டை போலவே இன்ஸ்டாவில் வரும் புகைப்பட அம்சம்.. 24 மணி நேரம் மட்டுமே இருக்கும்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

25 Apr 2026 18:05 PM

 IST

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய பொழுதுபோக்கு செயலியாக மெட்டாவின் (Meta) இன்ஸ்டாகிராம் (Instagram) செயலி உள்ளது. இந்த செயலியில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில், பலரும் அதனை விரும்பி பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராம், தொடர்ச்சியாக மற்ற செயலிகளில் இருக்கும் அம்சங்களை போலவே சில அம்சங்களை அறிமுகம் செய்து வருவது. அந்த வகையில், ஸ்னாப்சாட்டில் (Snapchat) உள்ளதை போலவே இன்ஸ்டாகிராமிலும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே இருக்கும் புகைப்பட  அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

புகைப்படங்கள் 24 மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் – இன்ஸ்டாவில் புதிய அம்சம்

இன்ஸ்டாகிராம் செயலியில் குறுஞ்செய்தி, ஸ்டோரி, வீடியோ, ரீல்ஸ் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன. இத்தகைய அம்சங்கள் இருந்தாலும், மேலும் புதிய புதிய அம்சங்களை மெட்டா அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் ஸ்னாப்சாட்டில் உள்ளதை போலவே 24 மணி நேரத்திற்கு மட்டும் இருக்கும் “Instants” என்ற புகைப்படம் தொடர்பான புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

இதையும் படிங்க : இனி வாட்ஸ்அப் மூலமாகவே ரீசார்ஜ் பண்ணலாம் – வெளியான புது அப்டேட்

இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் என்றால் என்ன? – அது எப்படி செயல்படும்?

இந்த அம்சத்தில் பயனர்கள் Disappearing புகைப்படங்களை அனுப்ப முடியும். அதாவது இந்த புகைப்படங்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், அவை 24 மணி நேரத்திற்கு சாட்டிலே இருக்கும். ஸ்னாப்சாட்டில் புகைப்படங்களை ஓபன் செய்ததுமே மறைந்துவிடும். ஆனால், இன்ஸ்டாகிராமின் இந்த புதிய அம்சத்தில் 24 மணி நேரம் வரை அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : மாணவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சிறந்த 5 ஏஐ டூல்கள்

புகைப்படங்கள் ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அம்சத்தில் எந்த விதமான எடிட்டிங் அம்சமும் கொடுக்கப்படவில்லை. புகைப்படம் எப்படி இருக்கிறதோ அப்படியே தான் அதனை மற்றவருக்கு அனுப்ப முடியும். இந்த அம்சத்தில் பயனர்கள் தங்களது கேலரியில் இருக்கும் புகைப்படங்களை அனுப்ப முடியாது. இன்ஸ்டாகிராம்  கேமராவில் எடுக்கும் புகைப்படங்களை மட்டுமே அனுப்ப முடியும். இந்த அம்சத்தை சோதனை செய்யும் நோக்கில் ஸ்பெயின், இத்தாலியில் உள்ள சில பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்