Realem 15 T : 7,000 mAh பேட்டரி.. 128 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி 15 டி!

Realme 15 T Smartphone | ரியல்மி நிறுவனம் தனது 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது, அந்த வகையில் தற்போது ரியல்மி 15 டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Realem 15 T : 7,000 mAh பேட்டரி.. 128 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி 15 டி!

ரியல்மி 15 டி

Updated On: 

02 Sep 2025 13:59 PM

இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ரியல்மி (Realme). இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வரும் நிலையில் தற்போது ரியல்மி 15 டி ஸ்மார்ட்போன்களை (Realme 15 T Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் தனது 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Realme 15 Series Smartphones) அறிமுகம் செய்து வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரியல்மி 15 டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்த ரியல்மி 15 டி ஸ்மார்ட்போன் 7,000 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 10 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என ரியல்மி கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தில் 13 மணி நேரம் வரை கேம் விளையாட முடியும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. 25 மணி நேரம் வரை யூடியூப் பார்க்க முடியும் என்றும், 128 மணி நேரம் வரை பாடல் கேட்க முடியும் என்றும் கூறியுள்ளது.

இதையும் படிங்க : Samsung A17 5G : ஏஐ முதல் மூன்று கேமரா செட் அப் வரை.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது சாம்சங் ஏ17 5ஜி!

ரியல்மி 15 டி ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 Max 5G அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி புகைப்படங்கள் மற்றும் வீடியோ கால் செய்வதற்காக முன்பக்கம் 50 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கேமராக்களும் 4K வரை வீடியோவை பதிவு செய்யும் அம்சம் கொண்டவையாக உள்ளன.

விலை மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்

  • 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கு
  • அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்களை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி நிறுவனத்தின் இணையதளம் மூலமும் வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.