Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

FD Scheme : 5 ஆண்டுகளுக்கான எஃப்டி திட்டம்.. 8.15% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

Banks Offers Highest Interest Rates for 5 Years FD | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், 5 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

FD Scheme : 5 ஆண்டுகளுக்கான எஃப்டி திட்டம்.. 8.15% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 17 Apr 2025 17:32 PM

சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்றால் பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக இருப்பது நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit) தான். காரணம், நிலையான வைப்பு நிதி திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன. நீண்ட நாட்கள் முதலீடு செய்ய வேண்டும், அல்லது பாதுகாப்பான வருமானத்தை பெற வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு இது மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். மற்ற சில திட்டங்களில் நிதியை இழக்கும் அபாயம் உள்ள நிலையில், இந்த திட்டத்தில் அத்தகைய சிக்கல்கள் எதுவும் இருக்காது என்பதால், பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இதனை தேர்வு செய்யலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டங்கள் பல்வேறு கால அளவீடுகளை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. அதாவது, 1 ஆண்டுக்கான திட்டம், 2 ஆண்டுகளுக்கான திட்டம், 3 ஆண்டுகளுக்கான திட்டம் மற்றும் 5 ஆண்டுகளுக்கான திட்டம். நிலையான வைப்பு நிதி திட்டம் இத்தகைய பாதுகாப்பான திட்டமாக கருதப்படும் நிலையில், 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சூர்யோதாய் சிறு நிதி வங்கி

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு சூர்யோதாய் சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank) 8.6 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஜனா சிறு நிதி வங்கி

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு ஜனா சிறு நிதி வங்கி (Jana Small Finance Bank) 8.2 சதவீதம் வட்டி வழங்குகிறது.

யூனிட்டி சிறு நிதி வங்கி

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு யூனிட்டி சிறு நிதி வங்கி (Unity Small Finance Bank) 8.15 சதவீதம் வட்டி வழங்குகிறது.

நார்த்ஈஸ்ட் சிறு நிதி வங்கி

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு நார்த்ஈஸ்ட் சிறு நிதி வங்கி (NorthEast Small Finance Bank) 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.

உட்கர்ஷ் சிறு நிதி வங்கி

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு உட்கர்ஷ் சிறு நிதி வங்கி  (Utkarsh Small Finance Bank) 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஏயு சிறு நிதி வங்கி

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு ஏயு சிறு நிதி வங்கி  (AU Small Finance Bank) 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி  (Equitas Small Finance Bank) 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

நுரையீரல் நோய்களுக்கு அருமருந்து.. பதஞ்சலியின் கண்டுபிடிப்பு
நுரையீரல் நோய்களுக்கு அருமருந்து.. பதஞ்சலியின் கண்டுபிடிப்பு...
நரசிம்ம ஜெயந்தி அன்று இதெல்லாம் கண்டிப்பாக செய்யாதீங்க!
நரசிம்ம ஜெயந்தி அன்று இதெல்லாம் கண்டிப்பாக செய்யாதீங்க!...
பழனிசாமி உத்தரவிட்டால் போர் செய்ய தயார் - ராஜேந்திர பாலாஜி
பழனிசாமி உத்தரவிட்டால் போர் செய்ய தயார் - ராஜேந்திர பாலாஜி...
எல்லையில் பதட்டம்.. ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? பிசிசிஐ விளக்கம்
எல்லையில் பதட்டம்.. ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? பிசிசிஐ விளக்கம்...
"நாங்கள் முடிக்க தயார்" பின்வாங்கிய பாகிஸ்தான்.. என்ன மேட்டர்?
ஊர்ந்து கிடந்த தமிழ்நாட்டிற்கு விடியலை கொடுத்துள்ளோம் - முதல்வர்
ஊர்ந்து கிடந்த தமிழ்நாட்டிற்கு விடியலை கொடுத்துள்ளோம் - முதல்வர்...
நடிகர் அதர்வாவின் பிறந்த நாள்... வைரலாகும் சுதா கொங்கரா போஸ்ட்
நடிகர் அதர்வாவின் பிறந்த நாள்... வைரலாகும் சுதா கொங்கரா போஸ்ட்...
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணத்தில் உடன் வரும் பிரியாவிடை அம்மன்!
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணத்தில் உடன் வரும் பிரியாவிடை அம்மன்!...
ஆபரேஷன் சிந்தூர்... குடியரசுத் தலைவரிடம் விளக்கிய பிரதமர் மோடி!
ஆபரேஷன் சிந்தூர்... குடியரசுத் தலைவரிடம் விளக்கிய பிரதமர் மோடி!...
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வெயில் கொளுத்துமா?
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வெயில் கொளுத்துமா?...
ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் வீடியோவை வெளியிட்ட படக்குழு
ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் வீடியோவை வெளியிட்ட படக்குழு...