போன் ரொம்ப ஸ்லோவா இருக்கா? இந்த 6 டிரிக்ஸை டிரை பண்ணுங்க!

Speed Up Your Phone : நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் நாளடைவில் மெதுவாக இயங்க தொடங்குகின்றன. இதனால் பலரும் புதுபோன் வாங்க திட்டமிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போனில் இந்த 6 டிரிக்ஸ்களை முயற்சிப்பதன் மூலம் நம் போன் மீண்டும் வேகமாக இயங்கத் தொடங்கும்.

போன் ரொம்ப ஸ்லோவா இருக்கா? இந்த 6 டிரிக்ஸை டிரை பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Published: 

15 Apr 2026 15:37 PM

 IST

ஸ்மார்ட்போன் இன்று நம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது. இந்த நிலையில் காலப்போக்கில், ஸ்மார்ட்போன் மெதுவாக வேலை செய்வது தான் பலரும் அடிக்கடி சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால் பலர் புதிய போன் வாங்க முடிவெடுக்கிறார்கள். ஆனால், சில எளிய மாற்றங்கள் செய்தாலே உங்கள் போனை மீண்டும் வேகமாக மாற்ற முடியும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட் போனின் வேகத்தை அதிகரிக்கும் 7 தந்திரங்கள்

1. நம் ஸ்மார்ட்போன் மெதுவாக இயங்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஸ்டோரேஜ் நிரம்பிவிடுவதாகும்.  நம் போன்களில் தேவையில்லாத செயலிகள், பழைய வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை நீக்காமல் வைத்திருந்தால், போன் வேகம் குறையும். எனவே, பயன்படுத்தாத செயலிகளை நீக்குவது நல்லது. அதே போல நம் போன்களில் பழைய போட்டோக்கள், வீடியோக்களை நமது கம்ப்யூட்டரில் மாற்றி விட்டு அதனை போனில் இருந்து நீக்கிவிட்டால் நம் போன் பழைய படி வேகவமாக இயங்கும்.

இதையும் படிக்க : கார் ஏசியை பாதுகாக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள்!

2. அடுத்ததாக நம் ஸ்மார்ட்போனில் பல செயலிகள் பின்னணியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இது ரேம் (RAM) பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் நம் ஸ்மார்ட்போன் மெதுவாக செயல்பட தொடங்கும். எனவே பயன்படுத்தும் நேரம் போக மற்ற நேரங்களில் நம் போனில் உள்ள செயலிகள் பின்னணியில் செயல்படுவதை கட்டுப்படுத்தவும். தேவையில்லாத Auto Sync வசதியை நிறுத்தவும்.

3. மேலும் நம் ஸ்மார்ட்போன் ஓஸ் அப்டேட்களை அவ்வப்போது மேற்கொள்வது நல்லது. நம் போனில் ஓஎஸ் பழைய வெர்சன் இருந்தால் போன் மெதுவாக இயங்கும் வாய்ப்பு அதிகம். புதிய அப்டேட்டில் செயல்திறனை மேம்படுத்தும் அம்சங்கள் இருக்கும் என்பதால் அதனை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

4. மேலும் நம போன் மெமரியை அதிகம் பயன்படுத்தும் செயலிகள் இருந்தால் அவற்றுக்கு மாற்றாக லைட் வெர்சனை பயன்படுத்தலாம். குறைவான RAM மற்றும் ஸ்டோரேஜ் பயன்படுத்துவதால் போனின் வேகம் குறையாது.

இதையும் படிக்க : எல்பிஜி தேவையில்லை, தீயில் சமைக்கும் உணர்வு – பிளாஸ்மா எலக்ட்ரிக் அடுப்பு பற்றி தெரியுமா?

5. மேலும் நம் போன்களில் உள்ள செயலிகளின் cache எனப்படும் டெம்பரரி ஃபைல்ஸ் காலப்போக்கில் அதிகமாக சேரும். இது மெமரியை அதிகம் எடுத்துக்கொள்ளும். இதனை அடிக்கடி நீக்குவதால் நம் போனின் வேகம் குறையும். இதற்காக போனில் உள்ள Settings பகுதியில் சென்று Appsகளின் cache-வை நீக்குவது நல்லது.

6. மேலும் போனில் உள்ள Developer options-ல் animation speed-ஐ குறைப்பதும் நமக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும். இதற்காக அனிமேஷன் ஸ்கேலை 0.5x ஆக மாற்றினால், போன் வேகமாக செயபல்பட தொடங்கும்.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி