எக்கச்சக்க சலுகைகளுடன் தீபாவளி சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு கொட்டிக்கிடக்கும் ஆஃபர்கள்!

OnePlus Diwali Sale 2025 | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல நிறுவனங்கள் அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் தீபாவளி சேலை அறிவித்துள்ளது. இதில் பல புதிய மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை வழங்க உள்ளது.

எக்கச்சக்க சலுகைகளுடன் தீபாவளி சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு கொட்டிக்கிடக்கும் ஆஃபர்கள்!

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

Updated On: 

23 Sep 2025 14:09 PM

 IST

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது பல நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கும். 2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை இன்னும் ஒருசில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், பல நிறுவனங்கள் தங்களது தீபாவளி சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையின் இந்தியாவில் பிரபலமாக உள்ள முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ஒன்பிளஸ் தனது தீபாவளி சேலை (OnePlus Diwali Sale) அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை (Flipkart Big Billion Days Sale) நடத்தவுள்ள நிலையில், அதனுடன் கைக்கோர்த்து ஒன்பிளஸ் இந்த சலுகையை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டில் மட்டுமன்றி ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை

தீபாவளியை முன்னிட்டு ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்க உள்ளது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் (OnePlus 13 Smartphone) ரூ.69,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வெறும் ரூ.61,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கி சலுகையாக ரூ.4,250 வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.57,749-க்கு வாங்கிக்கொள்ளலாம். மொத்தமாக ரூ.12,250 வரை இந்த ஸ்மார்ட்போனில் சலுகை பெற முடியும்.

ஒன்பிளஸ் 13 எஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் (OnePlus 13 S Smartphone) ரூ.54,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தீபாவளி சேலில் ரூ.50,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கி சலுகையாக ரூ.3,250 வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.47,749-க்கு வாங்கிக்கொள்ளலாம். அதன்படி, இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் ரூ.7,250 சலுகையாக பெற முடியும்.

இதையும் படிங்க : ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 56% தள்ளுபடி.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் கொட்டிக்கிடக்கும் சலுகைகள்!

ஒன்பிளஸ் 13 ஆர் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 13 ஆர் ஸ்மார்ட்போன் (OnePlus 13 R Smartphone) ரூ.37,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு ரூ.2,250 வங்கி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.35,749-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ ஸ்மார்ட்போன்

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ ஸ்மார்ட்போனுக்கு (OnePlus Nord CE Smartphone) ரூ.1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர ரூ.2,000 உடனடி வங்கி சலுகை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வெறும் ரூ.28,499-க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,500 வரை சலுகை கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் (OnePlus Nord CE5 Smartphone) ரூ.24,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அது ரூ.23,499-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதுதவிர ரூ.2,000 உடனடி வங்கு சலுகை வழங்கப்பட உள்ளது. இதன்படி, வெறும் ரூ.21,499-க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம்.