200 கி.மீக்கு மேல் மைலேஜ் – ஸ்பிளெண்டரை விட குறைந்த விலையில் ஓலாவின் எலக்ட்ரிக் பைக்

Ola Electric Bike : பெட்ரோல் விலை உயர்வு, காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களுக்காக எலக்ட்ரிக் பைக் வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஓலா தனது எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகளைக் குறைத்துள்ளது. இப்போது, ​​இந்த பைக் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டரை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.

200 கி.மீக்கு மேல் மைலேஜ் -  ஸ்பிளெண்டரை விட குறைந்த விலையில் ஓலாவின் எலக்ட்ரிக் பைக்

Ola Roadster X

Published: 

04 Mar 2026 19:20 PM

 IST

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது ஹோலி பண்டிகையின் ஒரு பகுதியாக அதன் ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்குகளின் விலையைக் குறைத்துள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக் தற்போது ரூ.79,999 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த திடீர் விலை குறைப்பின் காரணமாக அன்றாட பயன்பாட்டிற்கு குறைந் விலையில் பைக் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கான ஆரம்ப கட்ட விலையைக் குறைத்துள்ளது. இந்த விலை வரம்பில் பல பெட்ரோல் மாடல்களும் அடங்கும், அவை குறைந்த விலை காரணமாக பிரபலமாக உள்ளன. இதனால் தினசரி குறைந்த கிலோமீட்டர்கள் பயணம் செய்யும் பயனர்களுக்கு இந்த பைக் சிறப்பம்சமாகும். இந்த பைக்குகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஓலா ரோட்ஸ்டர் பைக்குகளுக்கு சிறப்பு சலுகை

ஓலா ரோஸ்டர் எக்ஸ் பைக்குகள் 3.5kwh மற்றும் 4.5kwh பேட்டரி என இரண்டு வகையிலான பேட்டரி ஆப்சன்களுடன் வருகிறது. இதன் விலை ரூ.92,999 மற்றும் ரூ.99. 999 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சற்று விலை உயர்ந்த ஓலா ரோட்ஸ்டர் எக் பிளஸ் 4.5 kwh மற்றும் 9.1 kwh பேட்டரி ஆப்சன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.89 லட்சம் ஆகிய விலைகளில் கிடைக்கிறது. இந்த பைக்குகள் 196 முதல் 201 கி.மீ வரம்பை வழங்குகின்றன.

இதையும் படிக்க : ஜிமெயிலில் சுலபமாக இமெயில்களை டிரான்ஸ்டேல் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

இந்த அறிவிப்பு ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. நாட்டில் எலக்ட்ரிக் பைக்குகள் வாங்குவதை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாக இந்த விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு, ஓலா இன்சைடர்ஸ் ரூ. 5,000 கூடுதல் நன்மையைப் பெறும். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட S1 Pro மற்றும் S1 Pro+ ஸ்கூட்டர் மாடல்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 8 ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் வழங்கப்படுகிறது. இது பைக்குகளுக்கு மட்டுமல்ல, நிறுவனத்தின் முழு அளவிலான எலக்ட்ரிக் வகனங்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன.

இதையும் படிக்க : தண்ணீரை உறிஞ்சும் ஏஐ.. சாட்ஜிபிடியில் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் இருக்கும் ஆபத்து!

தற்போதுள்ள ஸ்கூட்டர்களில் இருந்து புதிய மாடல்களுக்கு மேம்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் புதிய தலைமுறை S1 மின்சார ஸ்கூட்டர் மற்றும் ரோட்ஸ்டர் மோட்டார் சைக்கிளில் ரூ.50,000 வரை சலுகைகளைப் பெறலாம். தங்கள் சொந்த பெயரில் இரண்டாவது ஓலா வாகனத்தை வாங்கும் தற்போதைய வாடிக்கையாளர்கள் ரூ.20,000 வரை சலுகைகளைப் பெறுவார்கள். இதில் MoveOS தளம் மூலம் கேஷ்பேக் மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகள் அடங்கும். எலக்ட்ரிக் பைக் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த காலமாகும்.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ