தவறான மொழிபெயர்ப்பு: மெட்டாவுக்கு கர்நாடகா முதல்வர் கண்டனம்!

Siddaramaiah Warns Public : கர்நாடக முதல்வர் சித்தராமையா, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில்காணப்படும் கன்னட மொழிபெயர்ப்பு அம்சம் குறித்து கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார். மெட்டா நிறுவனத்தின் மொழி பெயர்ப்பு தவறான தகவல்களை வழங்குவதாக அவர் மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

தவறான மொழிபெயர்ப்பு: மெட்டாவுக்கு கர்நாடகா முதல்வர் கண்டனம்!

கர்நாடகா முதல்வர் சித்தராமையா

Published: 

19 Jul 2025 21:06 PM

கன்னட மொழி கண்டென்ட்களை தானாக ஆங்கிலமாக மாற்றும் ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) என  மெட்டா நிறுவனத்தின் மொழி பெயர்ப்பு அம்சம் தவறான தகவல்களை உருவாக்கி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறி, கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுபோன்ற மோசமான மொழிபெயர்ப்புகள் மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு வழிவகுக்கக்கூடும் என்றும், இது மிகவும் ஆபத்தாக முடியும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மெட்டாவுக்கு கடிதம் எழுதிய முதல்வரின் ஊடக ஆலோசகர்

கடந்த ஜூலை 2025  அன்று கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் ஊடக ஆலோசகர் கே.வி. பிரபாகர், மெட்டா நிறுவனத்திற்கு ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அனுப்பினார். அதில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கன்னட கண்டென்ட்களை ஆங்கிலமாக தானாக மொழிபெயர்க்கும் அம்சம் பெரும்பாலும் தவறாக உள்ளது என்றும், இதனால் அரசின் அறிவிப்புகள் போன்ற முக்கிய தகவல்களில் குழப்பம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி? எளிமையான வழி இதோ!

அந்த மின்னஞ்சலில், “தற்போது  போஸ்ட்களில் கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பு சரியானதாக இல்லை. தவறான வாக்கிய அமைப்பு மற்றும் பொருள் மாறுதல் மூலம் பொதுமக்கள் தகவலை தவறாக புரிந்து கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. இது அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் சரியாக மக்களுக்கு சென்றடைவதில்லை,” என அவர் குறிப்பிடுகிறார்.

மெட்டா நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு குறித்து கர்நாடக முதல்வரின் எக்ஸ் பதிவு

 

தானாக மொழிபெயர்ப்பு செய்யும் அம்சத்தை நிறுத்தக் கோரிக்கை

பொதுமக்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் சரியானதாக மற்றும் நம்பகமானவை இருக்க வேண்டியது அவசியம் என கூறிய சித்தராமையா, அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களில் தவறான மொழிபெயர்ப்பு ஏற்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். எனவே, மெட்டா தங்களது தானாக மொழிபெயர்ப்பு செய்யும் அம்சத்தை இனிமேல் கன்னடத்திற்கு மாற்ற வேண்டாம் என்றும், அது சரியான மொழிபெயர்ப்பாக வேண்டுமெனில் அதனை சரியான முறையில் மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: போனில் இந்த செட்டிங்ஸை மாற்றுங்கள் – யாராலும் திருட முடியாது! – எப்படி செய்வது?

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “தானாக மொழிபெயர்க்கும் அம்சம் சில சமயங்களில் விஷயங்களை மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது தவறான தகவல்களையும் தவறான புரிதல்களையும் உருவாக்குகிறது. பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.