Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி – சர்ச்சையில் ஏஐ உருவாக்கிய வீடியோ!

AI Creates Ambani as Auto Driver : பில்லியனரான முகேஷ் அம்பானி ஆட்டோ ஓட்டுநராக சித்தரித்திருக்கும் ஏஐ உருவாக்கிய வீடு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு பெரிய பணக்காரரான அம்பானி சைடு பிசினஸில் இறங்கியுள்ளார் என நெட்டிஷன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். யாரையும் எப்படியும் சித்தரிக்க முடியும் என்பது செயற்கை நுண்ணறிவின் வலிமையும் ஆபத்தும் அடங்கியிருக்கிறது.

ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி – சர்ச்சையில் ஏஐ உருவாக்கிய வீடியோ!
ஏஐ உருவாக்கிய வீடியோவில் ஆட்டோ ஓட்டுநராக அம்பானி
karthikeyan-s
Karthikeyan S | Published: 29 Apr 2025 19:53 PM

ஏஐ (AI) உருவாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி ஆட்டோ ஓட்டுநராக காட்சியளிக்கிறார். முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) ஆன்டிலியா என்ற வீடு  27 மாடிகள் கொண்டது. அந்த வீடு மும்பையின் (Mumbai) கும்பலா மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த வீட்டின் முன் அவர் ஆட்டோ ஓட்டுநர் தோற்றத்தில் இருக்கும் அந்த வீடியோ தற்போது பேசு பொருளாகியுள்ளது. அந்த வீடியோவை ஆனவ் நாயர் (Anav Nayar) என்பவர் பகிர்ந்துள்ளார். அதில் முகேஷ் அம்பானி தனது 27 மாடி வீட்டின் முன் எளிய ஆட்டோ ஓட்டுநராக தண்ணீர் குடிக்கிறார். ஆட்டோ ஒன்றும் அவருடன் இருக்கிறது.

மற்றொரு வீடியோவில் கௌதம் அதானி, ஆனந்த் மகிந்திராவுடன் இணைந்து அம்பானி டீ குடித்த படியே கார்ட்ஸ் விளையாடுகிறார். அப்போது மூவரும் மகிழ்ச்சியாக பேசி சிரித்தபடி இருக்கின்றனர். மூவரும் எளிய ஆட்டோ ஓட்டுநர் உடையில் எளிமையாக காட்சியளிக்கின்றனர். இந்த வீடியோவும் அம்பானியின் வீட்டின் முன் இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆட்டோ ஓட்டுநராக அம்பானி

 

 

View this post on Instagram

 

A post shared by Anav Nayar (@ai_anav)

மற்றொரு வீடியோவில், அவர் தூய்மை பணியாளர் உடையில் அம்பானி இருக்கிறார். மேலும் அவரது வீட்டின் முன்புறம் உள்ள ஒரு பாதாள சாக்கடையை சுத்தம் செய்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி நடனமாடி சிரித்து மகிழ்ந்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் வீடியோவையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். ஒரு பக்கம் இது காண்போரை மகிழ்ச்சியடைய செய்தாலும் இது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

துப்புரவு தொழிலாளராக அம்பானி

 

 

View this post on Instagram

 

A post shared by Dream Max AI (@dreamax.ai)

இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் இதனை நகைச்சுவையாக மாற்றி, அவர்கள் பல்வேறு மீம்கள் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு பயனர் “இவ்வளவு பெரிய பணக்காரரான அம்பானி சைடு பிசினஸில் இறங்கியுள்ளார்” என்று கூறியுள்ளார், மற்றொரு பயனர் “நாகரிகமானவராக இருந்து முயற்சி செய்து அவருக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவர், “ஏஐ ஆல் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த வீடியோ எய்ஐ தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி நாம் உண்மையை மாற்றி, உலகளாவிய அளவில் வியப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்துகிறது.

ஏஐ சக்தி மிக்க ஒன்று ஆனால் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது அதில் முக்கியம். இது நகைச்சுவையாக தெரிந்தாலும் அதில் உள்ள ஆபத்துகளையும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்க முடியும். அதனால் இது எதிர்காலத்தில் ஆபத்தாக கூட முடியலாம்.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...