இந்தியாவில் ChatGPT Go அறிமுகம் – கட்டணம் எவ்வளவு தெரியுமா?
ChatGPT Go Update : இந்தியாவில் சாட்ஜிபிடி கோ என்ற புதிய திட்டத்தை பயனர்களுக்கு ஓபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்துக்கான கட்டணம் எவ்வளவு மற்றும் சாட்ஜிபிடிக்கும் சாட்ஜிபிடி கோவிற்கும் உள்ள வித்தியாசங்கள் ஆகியவை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு கருவிகளான ஏஐ (AI) சாட்பாட்கள் மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிமையாக மாற்றியிருக்கிறது. குறிப்பாக மக்கள் கடைகளில் பழங்கள் வாங்குவது முதல், ஹெல்த் அட்வைஸ் வரை சாட்ஜிபிடியை கேட்காமல் எதுவும் செய்வதில்லை. சமீபத்தில் ஒருவர் தர்பூசணி பழம் வாங்கும்போது சாட்ஜிபிடியின் அறிவுரையைக் கேட்டு வாங்கிய வீடியோ வைரலானது. இந்த நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) திட்டத்தை இந்திய பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை வந்துள்ள ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன்களில் இதுவே மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு எளிதாக பயன்படுத்த யுபிஐ பேமெண்ட் வசதி சப்போர்ட்டுடன் இந்த திட்டம் அறிமுகமாகியுள்ளது.
சாட்ஜிபிடி கோ
- சாட்ஜிபிடி கோ ப்ரீமியம் பெறும் பயனர்கள் அதிக மெசேஜ் அனுப்பலாம்,
- டாக்குமென்ட்களை அப்லோடு செய்யலாம்.
- போட்டோ ஜெனரேட் ஆவது வேகமாக நடக்கும்.
- நாம் மெசேஜ்களை நினைவில் பதிலளிக்கும் வகையில் மெமரி வசதி
மேற்சொன்ன பயன்கள் அனைத்தும் சாட்ஜிபிடி கோ பயனர்களுக்கு கிடைக்கும். இதற்காக மாதம் ரூ.399 கட்டணம் நிர்ணயித்துள்ளது. யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தலாம்.
இதையும் படிக்க : இனி வேலை ஈஸியா கிடைக்கும்… ஏஐ வேலைவாய்ப்பு தளத்தை உருவாக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்




சாட்ஜிபிடி பிளஸ்
- சாட்ஜிபிடி பிளஸ் சப்ஸ்கிரைப் செய்யும் பயனர்களுக்கு ஜிபிடி-5 மட்டுமல்லாமல் ஜிபிடி 4 டர்போ போன்ற மாடல்களையும் பயன்படுத்தலாம். சாட்ஜிபிடி கோ பயன்களுடன் கூடுதலாக சில வசதிகள் கிடைக்கும்.
- Sora AI வீடியோ வசதி கிடைக்கும். இதன் மூலம் டெக்ஸ்ட் டூ வீடியோ கருவி பயன்படுத்தலாம். அதாவது நாம் கொடுக்கும் கண்டென்ட்களுக்கு ஏற்ப வீடியோ உருவாக்கி கொடுக்கும்.
- கோடேக்ஸ் ஏஜெண்ட் என்ற கோடிங் சப்போர்டர் வசதி கிடைக்கும்.
- விரைவான பதில்கள் ஆகிவை நமக்கு கிடைக்கும்.
இதையும் படிக்க : ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை பயன்படுத்தலாம்.. இன்ஸ்டாகிராமில் வரும் அசத்தல் அம்சம்!
சாட்ஜிபிடி கோ பயன்படுத்துவது எப்படி?
- இணையதளம் அல்லது மொபைல் ஆப்பில் சாட்ஜிபிடி ஆப் ஓபன் செய்யவும்
- உங்கள் இமெயில் முகவரி மூலம் லாகின் செய்யவும்.
- Upgrade to Go என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
- Try Go என்பதைத் தேர்வு செய்து, UPI மூலம் கட்டணம் செலுத்தவும்.
இதன் மூலம் உங்களுக்கு சாட்ஜிபிடி கோ வசதிகள் உங்களுக்கு வழங்கப்படும்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி கோ திட்டம் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை இந்தியாவில் இணையதளம் அல்லது மொபைல் ஆப்பிலும் பயன்படுத்தலாம். குறைந்த விலையில் ப்ரீமியம் அனுபவம் பெற விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.