திருமணமான 20 நாள்.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

Tiruvallur Crime News : திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணமான 20 நாட்களில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணம் நடந்த பிறகு, கணவர் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ள நிலையில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமணமான 20 நாள்.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

Updated On: 

25 Sep 2025 06:36 AM

 IST

திருவள்ளூர், செப்டம்பர் 25 : திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணமான நாளில் இருந்து கணவர் மனைவி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (25). இவர்கள் இருவருக்கும் 2025 செப்டம்பர் 4ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண நடந்த நாளில் இருந்து இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

சிறுசிறு விஷயங்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தன் காரணமாக, இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது பிரச்னையில் பலமுறை கார்த்திகேயனின் பெற்றோர் தலையிட்டு சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும், இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 23ஆம் தேதி இரவு மீண்டும் இருவருக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான நேற்று காலை கார்த்திகேயன் தனது மனைவி ஜெயஸ்ரீரியை வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ளே வைத்து பூட்டி மற்றொரு அறைக்கு சென்றிருக்கிறார்.

Also Read : பட்டப்பகலில் அதிர்ச்சி.. மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்.. வேலூரில் சம்பவம்

புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

அங்கு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெயஸ்ரீ ஜன்னல் வழியாக கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனை அறிந்து, எதிர்வீட்டில் வசித்து வந்த கார்த்திகேயனின் பெற்றோர், உடனே வெளியே வந்து பார்த்துள்ளனர். பின்னர், மாடிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த செவ்வப்பேட்டை போலீசார் கார்த்திகயேனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : மனைவியை கயிற்றில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்த கணவன்.. பணம் தராத ஆத்திரத்தில் வெறிச்செயல்!

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)