குறி தப்பா போயிடுச்சு.. கோழியை சுட்டபோது விபரீதம்.. துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் பலி

Kallakurichi Crime News : கள்ளக்குறிச்சியில் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கோழியை பிடித்து குழம்பு வைப்பதற்காக அண்ணாமலை என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டத்தில், குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த இளைஞர் மீது குண்டு பாய்ந்துள்ளது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

குறி தப்பா போயிடுச்சு.. கோழியை சுட்டபோது விபரீதம்..  துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் பலி

உயிரிழந்த இளைஞர்

Updated On: 

26 Sep 2025 17:16 PM

 IST

கள்ளக்குறிச்சி, செப்டம்பர் 26 : கள்ளக்குறிச்சியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருமகனுக்கு விருந்து வைப்பதற்காக கோழியை நாட்டு துப்பாக்கியால் சுடமுயன்றபோது குறி தவறியதால், இளைஞர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே மேல்மதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவரது மகளுக்கு சமிபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதனால் விருந்து சாப்பிடுவதற்காக அண்ணாமலை வீட்டிற்கு மகளும், மருமகனும் வந்துள்ளனர். இதனால், அவர்களுக்கு கோழி அடித்து குழம்பு வைக்க முடிவு செய்தார். இந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே கோழி ஒன்று சுற்றித்திரிந்துள்ளது.

இதனை கண்ட அண்ணாமலை, அந்த கோழியை பிடிக்க முடிவு செய்தார். கோழியை பிடிக்க நீண்ட நேரம் முயற்சித்த அண்ணாமலையால் பிடிக்க முடியவில்லை. இதனால், தான் வைத்திருக்கும் துப்பாக்கியை வைத்து கோழியை சுட்டு பிடிக்க முடிவு செய்தார். வீட்டில் உள்ளே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து, அந்த கோழியை குறி பார்த்து அண்ணாமலை சுட்டுள்ளார். ஆனால், அந்த கோழி அண்ணாமலையின் துப்பாக்கி குண்டில் சிக்காமல் ஓடி இருக்கிறது.

Also Read : இறந்த 45 தெருநாய்களில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று உறுதி.. கோயம்புத்தூரில் அதிர்ச்சி!

துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் பலி

இதனால், அந்த துப்பாக்கி குண்டு பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் பாய்ந்துள்ளது. இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்த இளைஞர் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே கரியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞர் பிரகாஷை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பிரகாஷ் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து, அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அண்ணாமலையை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read : விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்கக்கூடாது.. மீறினால் கடும் நடவடிக்கை – பள்ளிக்கல்வித் துறை..

நாட்டு துப்பாக்கியை எப்படி வாங்கினார்? எதிர்பாராத வகையில் நடந்ததா? திட்டமிட்டு நடந்த கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரகாஷை கொலை செ,யய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அண்ணாமலை சுட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டி உள்ளனர். ஆனால், கோழியை சுட்டதால் தான் குறிதவறி குண்டு சென்றுவிட்டதாக அண்ணாமலை கூறுகிறார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.