17 ஆண்டுகள் பகை.. தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்.. சென்னையில் அதிர்ச்சி!
Chennai Murder : சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தை கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், ரவுடி ராஜ்குமாரை, கல்லூரி மாணவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாதிரிப்படம்
சென்னை, ஆகஸ்ட் 08 : சென்னையில் தனது தந்தை கொலைக்கு (Chennai Murder) பழித்தீர்க்கும் நோக்கிய, 17 ஆண்டுகளுககு பிறகு கல்லூரி மாணவர் ரவு ராஜ்குமார் என்பவரை கொலை செய்துள்ளார். டி.பி.சத்திரம் பகுதியில் அதிமுக பிரமுகரான ராஜ்குமாரை கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். ராஜ்குமாரை ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். சென்னை டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதிமுக பிரமுகர் என கூறப்படுகிறது. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக ராஜ்குமார் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாமல், திருமண பந்தல் போடுவது, பாத்திரங்களை வாடகைக்கு விடுவது போன்ற தொழில்களை அவர் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு ரவுடி ராஜ்குமார் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ராஜ்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு சென்றுள்ளது. ராஜ்குமாரை வெட்ட முயன்ற போது அவர் தப்பித்து ஓடி இருக்கிறார். இருப்பினும், அவரை விடாமல் 6 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று, ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
Also Read : தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்… தோட்டத்தில் கிடந்த சடலங்கள்.. கேரளாவை அதிர வைத்த சீரியல் கில்லர்!
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜ்குமாரை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க மருத்துவத்தில் பரிசோதனை செய்ததில் உயிரிழநதுவிட்டதாக கூறியுள்ளனர்.
தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்
இந்த கொலை சம்பவம் குறித்து டி.பி. சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ராஜ்குமாரை கொலை செய்த கும்பலின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அண்ணாநகர் போலீசாரிடம் இரண்டு பேர் சரணடைந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக ஆறு பேர் தற்போது வரை கைதாகி உள்ளனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. கைதானவர்களில் ஒருவர் 19 வயதான யுவனேஷ். இவர் அதே பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
Also Read : கோவை காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன? தீவிர விசாரணை
அவரது தந்தை செந்தில்குமார். இவர் 2008ஆம் ஆண்டு அமைந்தகரை பகுதியில் ரவுடி ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரை கொலை செய்துள்ளனர். தந்தை கொலைக்கு பழிவாங்க நினைத்த யுவனேஷ், 17 ஆண்டுகள் கழித்து தற்போது தனது கூட்டாளியுடன் ராஜ்குமாரை வெட்டிக்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட யுவனேஷ் மீது கஞ்சா உள்ளிட்ட வடக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.