AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்.. ஆம்புனல்சிலே பிறந்த குழந்தை!

Woman Gave Birth To A Baby Boy In Ambulance | ஈரோடு மலைப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவருக்கு பாதி வழியில் ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது.

பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்.. ஆம்புனல்சிலே பிறந்த குழந்தை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Jul 2026 23:08 PM IST

ஈரோடு, ஜூலை 05 : ஈரோட்டில் (Erode) , மலைப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆம்புலன்சின் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்காக அந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பாதி வழியிலேயே பிரச வலி அதிகமாகி அவருக்கு ஆம்புலன்சிலே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரசவத்திற்காக ஆம்புலன்சில் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தம்புரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி ராசத்தி என்ற 35 வயது பெண்ணுக்கு ஜூலை 03, 2026 அன்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், குடும்பத்தினர் 108 ஆம்புலன்சில் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து.. கூடுதல் 50 பேருந்துகள் இயக்கம்!

ஆம்புலன்சில் ஆண் குழந்தை பெற்ற பெண்

இரவு 10 மணி அளவில் ஆம்புலன்ஸ் வாகனம் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது அவருக்கு பிரசவ வலி கடுமையாகியுள்ளது. இதன் காரணமாக, ஆம்புலன்ஸ் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் நேரம் வந்த நிலையில், ஆம்புனல்சில் இருந்த மருத்துவ உதவியாளர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இந்த பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் இருந்து திருச்சிக்கு 3 மணி நேரத்தில் பயணிக்கலாம்.. தமிழகத்தின் 2வது பெரிய விரைவுச்சாலை பணிகள் தொடக்கம்!

தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்

பிரசவ வலி எடுத்த நிலையில், பிரசவத்திற்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே பிறந்த குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow Us