‘அண்ணா வழியில் செல்வோம்.. இனி மக்களுடன் தான் வாழ்க்கை’ தவெக தலைவர் விஜய் பேச்சு
Tamilaga Vettri Kazhagam Chief Vijay : தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் செயலியை விஜய் அறிமுகம் செய்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், அண்ணா வழியில் மக்களிடம் செல்வோம் எனவும் மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தல் ஒரு திருப்புமுனையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்
சென்னை, ஜூலை 30 : சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் செயலியை (TVK Membership App) அக்கட்சி தலைவர் விஜய் (TVK Chief Vijay) அறிமுகம் செய்தார். MY TVK என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் விஜய் பேசினார். அவர் பேசுகையில், “தமிழக அரசியில் இரண்டு மிகப்பெரிய தேர்தல்கள் நடந்தது. அதாவது, 1967, 1977ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலைப் போல 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அமையும். 1967, 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தல் திருப்புமுனையாக அமைந்தன. அதேபோல, வரும் 2026 தேர்தலுக்கு திருப்புமுனையாக அமையும். மாபெரும் இரண்டு தேர்தல்களில் அதிகார பலம், அசுர பலத்தை எதிர்த்து நின்று தான் அத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்பதை கையில் எடுத்து அனைத்து மக்களை சந்தித்து வெற்றி பெற்றார்கள்.
மக்களுடன் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு என அண்ணா கூறியதை சரியாக செய்தாலே போதும். அண்ணா வழியில் செல்வோம். இனி மக்களுன் தான் வாழ்க்கை. ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு வெற்றி பேரணியில் தமிழ்நாடு. இதுபோன்று அனைத்து குடும்பங்களையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கட்டாயம் ஜெயிக்க முடியும். அதனால் இந்த ஆப்பை அறிமுகம் செய்து வைத்துள்ளேன். அடுத்தது மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு என அடுத்தடுத்து நடக்க உள்ளது. நாம் இருக்கின்றோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்” என கூறியுள்ளார்.
Also Read : திமுகவின் ஊழல்கள் தான் பாஜகவை வளர்த்து வருகிறது – ஆதவ் அர்ஜுனா.
தவெக தலைவர் விஜய் பேச்சு
நமது கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அறிமுக விழாவில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், நமது வெற்றித் தலைவர் அவர்களின் உரை!
#வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு pic.twitter.com/umGaW4fZ7y
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) July 30, 2025
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. திமுக, அதிமுக பாஜக கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதில் புதிதாக களத்திற்கு வந்த, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனித்து போட்டியிடுவதாக கூறியிருக்கிறார்.
மேலும், அதிமுகவுடன் கூட்டணி அமையக்குமா என்ற பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதற்கிடையில், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்பபடுத்த விஜய் தீவிரமாக இறங்கியுள்ளார். மேலும், உறுப்பினர் சேர்க்கையும் விரைவுபடுத்தியுள்ளார்.
Also Read : அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திட்டவட்டமாக மறுத்த தவெக.. பின்னணி என்ன?
ஏற்கனவே, உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது MY TVK என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.