தமிழகத்தின் எதிர்கால தொழில் திட்டங்களின் மைல்கல்.. இன்று தொடங்கும் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு..
Vetri Tamil Nadu Investment Conclave: தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 13, 2026: சென்னை கிண்டியில் இன்று காலை 11 மணிக்கு ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் எதிர்கால தொழில் திட்டங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் மாநாடாக இது அமையும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல் இந்த மாநாடு:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து, நாளை நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த… pic.twitter.com/QGuWsoeKRQ
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) August 12, 2026
இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து, நாளை நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நீலகிரி, தேனிக்கு மஞ்சள் எச்சரிக்கை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மழை..
மேலும், “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது. தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: “நடுக்கடலில் பயங்கரம்!”.. சவுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு.. தமிழக மீனவர் பரிதாப பலி!!