Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீல் சேர் கிடையாது.. 84 வயது நோயாளியை இழுத்து சென்ற மகன் .. கோவை மருத்துவமனையில் சம்பவம்

Coimbatore Government Hospital : கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேர் வழங்கப்படாததால், 84 வயதான நோயாளியை அவரது மகனே கை தாங்கலாம் அவரை இழுத்து சென்றுள்ளார். மேலும், வீல் சேர் கொடுக்க 100 ரூபாயை அங்கிருக்கும் ஊழியர் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து, 2 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வீல் சேர் கிடையாது.. 84 வயது நோயாளியை இழுத்து சென்ற மகன் .. கோவை மருத்துவமனையில் சம்பவம்
கோவை மருத்துவமனை
Umabarkavi K
Umabarkavi K | Published: 11 Sep 2025 06:30 AM IST

கோவை, செப்டம்பர் 11 : கோயம்புத்தூர் மருத்துவமனையில் வீல் சேர் இல்லாமல் நோயாளியை, அவரது மகன் இழுத்து சென்றுள்ளார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, இந்த மருத்துவமனையில் சராசரியாக 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகும், 500க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும் சிசிச்சை பெற்று வருகின்றனர். இப்படியாக இருக்கும் இந்த மருத்துவமனையில், வீல் சேர் இல்லாமல் 84 வயதான நோயாளியை அவரது மகன்  இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ்.

இவரது தந்தை 84 வயதான வடிவேலு. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். சர்க்கரை நோயால் ஏற்பட்ட கால் புண்ணிற்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 10ஆம் தேதியான நேற்று வழக்கம்போல வடிவேலை சிகிச்சைக்காக காளிதாஸ் அழைத்து சென்றுள்ளார். சிகிச்சைக்கு மருத்துவரிடம் கொண்டு செல்ல வீல் சேர் கேட்டுள்ளார். வீல் சேர் உடனே வேண்டுமென்றால் அவர்கள் ரூ.100 கேட்டதாக கூறப்படுகிறது.

Also Read : சேலத்தை அதிர வைத்த பெண்.. திண்டுக்கல் வியாபாரிடம் ரூ.10 கோடி மோசடி!

84 வயது நோயாளியை இழுத்து சென்ற மகன்


இதற்கு காளிதாஸ் பணத்தை கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும், ஆனால், 30 நிமிடங்கள் ஆகியும் வீல் சேர் தரப்படவில்லை என தெரிகிறது.  நீண்ட நேரமாக காத்திருந்த காளிதாஸ், வேறு வழியில்லாமல் தனது தந்தை வடிவேலை தூக்க முடியாமல் கை தாங்கலாக இழுத்து சென்று, ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி விசாரணை மேற்கொண்டார். இதனை அடுதது, ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர்கள் எஸ்ர் ராணி மற்றும் மணி வாசகம் ஆகிய இரண்டு பேரை ஐந்து நாட்களுக்கு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி கூறுகையில், “ஊழியர் பணம் கேட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எதிர் வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கவும், நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Also Read : கராத்தே கிளாஸ் வந்த மாணவிகளின் அம்மா டார்கெட்.. சிக்கிய மாஸ்டர்!

ஒப்பந்த நிறுவனத்தின் குறைந்தது நான்கு ஊழியர்கள் வெளிப்புற நோயாளிகளுக்காக வீல் சேர் மற்றும் ஸ்ட்டெச்சர்களுடன் தயார் நிலையில் எப்போது இருப்பார்கள். ஸ்ட்ரெச்சர்களில் பொருட்கள் மற்றும் மருந்துகளை கொண்டு செல்வதைத் தவிர்க்க, அதிக தள்ளுவண்டிகள் வாங்கப்படும். தற்போது வெளிநோயாளிகளுக்காக பத்து சக்கர நாற்காளிகள் மற்றும் ஆறு ஸ்ட்ரெச்சர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன” என்று கூறினார். இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.