ஜன.25ல் மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. பங்கேற்கிறார் விஜய்..

TVK workers meet: ஜனவரி 25ஆம் தேதி விஜய் தனது கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடைபெறும் தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளதாகவும், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசுவார் என்றும் தெரிகிறது.

ஜன.25ல் மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. பங்கேற்கிறார் விஜய்..

தவெக செயல் வீரர்கள் கூட்டம்

Updated On: 

22 Jan 2026 10:01 AM

 IST

சென்னை, ஜனவரி 22: மாமல்லபுரத்தில் ஜனவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக தொண்டர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தவெக தீவிரமாகத் தயாராகி வருகிறது. கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடுத்தடுத்து நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மற்றும் தேர்தல் பிரச்சாரக் குழுவின் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, விஜய் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அதோடு, அடுத்த பொதுக்கூட்டம் குறித்தும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், இந்த தேர்தலில் தவெக போட்டியிடுகிறதா? என்ற அளவுக்கு விமர்னங்கள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க: திமுகவின் வாரிசு ஆட்சியால்… டிடிவி தினகரனுக்கு அமித் ஷா வரவேற்பு

வாய் திறக்காத விஜய்:

அதேசமயம், விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் சர்ச்சை மற்றும் சிபிஐ விசாரணை உள்ளிட்ட தன்னைச் சுற்றியுள்ள விவகாரங்கள் குறித்து விஜய் மௌனம் காத்து வருகிறார். அவர் எதற்காக இவ்வளவு மெளனம் காத்து வருகிறார், அவருக்காக முதல்வர் ஸ்டாலின் கூட தணிக்கை வாரியத்தை கண்டித்த நிலையில், விஜய் தற்போது வரை வாய் திறக்கவில்லை. இப்படி, தேர்தல் நெருங்கும் சமயத்தில் விஜய் அடுத்தடுத்து தீவிரமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதேசமயம், தமிழகத்தில் முக்கிய கட்சிகள் பலவும் தங்களது கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. அதேநேரத்தில், தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராததும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்:

இந்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதி விஜய் தனது கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடைபெறும் தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் விஜய் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், தவெக தேர்தல் பிரச்சார ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

பிரச்சார பயணத் திட்டம்:

பொதுச் செயலாளர் ஆனந்த், செயற்குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிற நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், தேர்தல் பிரச்சார உத்தி, பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்கள் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்படி, பிரச்சாரப் பயணத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : நீடிக்கும் கூட்டணி குழப்பம்.. ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசிக்கும் முடிவில் திமுக?

இந்த கூட்டத்திற்குப் பிறகு, செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, தவெக சார்பில், இந்த மாதம் 26ஆம் தேதி சென்னையில் இருந்து எங்களின் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்க உள்ளோம். கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அனைத்து 234 தொகுதிகளிலும் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். ஒவ்வொரு இடத்திலும், செயற்குழு உறுப்பினர்களின் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவோம். கூட்டணியில் போட்டியிடுவோமா அல்லது தனித்துப் போட்டியிடுவோமா என்பதை விஜய் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்.. மும்பை - அகமதாபாத் இடையே வரும் மாற்றம்..
கிரீன்லாந்தில் நிலவும் பதற்றம்.. தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்!!
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் வீடியோ.. என்ன தெரியுமா?