ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதல் தொடர்பான செய்திகளை சில டிவி சேனல்கள் அதிகப்படுத்தி, ஊகங்களுடன் ஒளிபரப்புகின்றன என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்திய அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், டிவி சேனல்களின் பார்வையாளர் மதிப்பீட்டை அளக்கும் பிஏஆர்சி நிறுவனத்திற்கு டிவி செய்தி சேனல்களின் டிஆர்பி மதிப்பீடுகளை 4 வாரங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.