Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய தவெக

TVK Vijay : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை தமிழக வெற்றிக் கழகம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் சென்று வழங்குவார் என்று கூறப்பட்ட நிலையில், வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டிருக்கிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய தவெக
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Oct 2025 19:12 PM IST

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் (Vijay) மேற்கொண்ட பரப்புரையின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திப்பார் என கூறப்பட்ட நிலையில், தவெக சார்பில் ரூ.20,00,000 நிவாரண தொகை அவர்களது வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிவாரண தொகையை வழங்கிய தவெக

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்த குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் விஜய் அறிவித்தார். இதனை அவர் நேரில் சென்று சந்திப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : கரூர் வழக்கு… தனி நபரை பலிகடாவாக்குது நோக்கமல்ல… முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

உயிரிழந்தோர் குடும்பத்தினரின் வங்கி கணக்கு, ஆதார் விவரங்களை கரூர் மாவட்ட தவெக தொண்டர்கள் அக்கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரணத் தொகை வரவு வைக்கப்ப்டடுள்ளது. மேலும் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு விரைவில் நிவாரணத் தொகை அனுப்பப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களை கடந்த அக்டோபர் 17, 2025 அன்று கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சந்தித்து ஆறுதல் அளிப்பார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை தன் கையாலேயே வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தீபாவளி காலகட்டம் என்பதால் விஜய் அங்கு செல்வதை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மேல் தாமதப்படுத்த வேண்டாம் என பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கிற்கு நிவாரணத் தொகை அனுப்பப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க : சிபிஐ விசாரணை…. அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக? – என்ன செய்யப்போகிறார் விஜய்?

விஜய்யின் அடுத்த திட்டம்?

விஜய்யின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. கரூர் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு பிறகு கட்சி அலுவலகம் வந்த விஜய், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரும் பனையூர் அலுவலகம் வந்திருக்கின்றனர்.  மீண்டும் பரப்புரையைத் தொடங்குவது குறித்து விவாததித்தாகவும் கூறப்படுகிறது. மேலும் தவெக கூட்டணி குறித்தும் விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.