Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்… பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 – தவெக நிர்வாகி அறிவிப்பு

Karur Stampede : தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை வருகிற அக்டோபர் 17, 2025 அன்று கரூரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவரது கட்சி நிர்வாகியும் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் மரிய வில்சன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5,000 தரவுள்ளதாக அறிவித்திருக்கிறார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்… பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 – தவெக நிர்வாகி அறிவிப்பு
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Oct 2025 23:12 PM IST

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் உச்சநீதிமன்றம் அக்டோபர் 13, 2025 அன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை வருகிற அக்டோபர் 17, 2025 அன்று கரூரில் சந்திக்கிறார். தனியார் கல்யாண மண்டபத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தவெக அறிவித்த ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தவெக நிர்வாகி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அதுகுறித்து பார்க்கலாம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5,000

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 வழங்கவுள்ளதாக ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி தலைவரும் தவெக நிர்வாகியுமான மரிய வில்சன் அறிவித்திருக்ிகறார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கல்வி, தகுதிக்கு ஏற்ப வேலை, மற்றும் ஆயுள் காப்பீடும் வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்.  இது தவெகவினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க :

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை வருகிற அக்டோபர் 17, அன்று விஜய் சந்திக்கவிருக்கிறார். இதற்காக தனியார் மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பார் என்றும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை வரவழைத்து சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதன் படி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20,00,000 மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்குவார் என்று கூறப்படுகிறது. இதற்கான நெறிமுறைகளை காவல்துறை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் போது தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.

விஜய்யின் எக்ஸ் பதிவு

 

இந்த நிலையில் கரூர் வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் நீதி வெல்லும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்ததில் இருந்து வீடியோ வெளியிட்டதற்கு அமைதியாக இருந்த விஜய் தற்போது முதன்முறை பதிவிட்டிருப்பது அவரது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது முதன்முறையாக பதிவிட்டிருக்கிறார்.  இந்த நிலையில் கரூர் செல்லும் விஜய் செய்தியாளர்களை சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்

நீண்ட இடைவேளைக்கு பிறகு தவெக தலைவர் விஜய் நவம்பர் 22, 2025 முதல் மீண்டும் பரப்புரைக்கு செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சாலைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்களை சந்திக்கக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் அவர் பொதுக்கூட்டம் மூலம் மக்களை சந்திப்பார் என கூறப்படுகிறது. அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வரப்படுகின்றன என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.