Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல… தேர்தல் ஆணையம் அறிவிப்பு – என்ன நடந்தது?

Karur Stampede Case : தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தவெக அங்கீகரிக்கப்படாத கட்சி என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல… தேர்தல் ஆணையம் அறிவிப்பு – என்ன நடந்தது?
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Oct 2025 16:26 PM IST

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) கரூரில் மேற்கொண்ட பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். இந்த சம்பவம் கடந்த சில வாரங்களாக அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள நிலையில், கரூரில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம் அக்டோபர் 17, 2025 அன்று விஜய் கரூர் செல்வார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது கரூர் பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரவாக பார்க்கலாம்.

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல

கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அங்காரத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு அக்டோபர் 17, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், விஜய்யின் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பதால் அதன் உரிமத்தை ரத்து செய்ய முடியாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிலளித்துள்ளது.

இதையும் படிக்க : 19 நாட்களுக்கு பின் பனையூர் சென்ற விஜய்.. நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியது என்ன?

விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால் இதுவரை விஜய் மௌனமாகவே இருந்து வருகிறார். சமீபத்தில் கரூர் மாவட்ட செயலாளருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அவரை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு அழைத்து பேசினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்கும்படி அவருக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : கரூர் வழக்கு… தனி நபரை பலிகடாவாக்குது நோக்கமல்ல… முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பாதிக்கப்பட்ட மக்களை அக்டோபர் 17, 2025 அன்று கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விஜய் சந்திப்பார் என கூறப்பட்ட நிலையில், அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாம். தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தீபாவளிக்கு பிறகு அவர் கரூர் செல்வார் என கூறப்படுகிறது. மேலும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறாராம். தொடர்ந்து நவம்பர் 25, 2025 முதல் பரப்புரையை மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.