AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு பேருந்தில் விஜய்யின் தவெக பெயர் – ஹேக் செய்யப்பட்டதா? போக்குவரத்துறை விளக்கம்

TVK Name Flashes on Government Bus : தமிழக அரசு பேருந்து ஒன்றின் டிஜிட்டல் பெயர் பலகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெயர் இடம் பெற்றிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து போக்குவரத்துத்துறை விளக்கமளித்துள்ளது.

அரசு பேருந்தில் விஜய்யின் தவெக பெயர் – ஹேக் செய்யப்பட்டதா? போக்குவரத்துறை விளக்கம்
அரசு பேருந்தில் தவெக பெயர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Apr 2026 11:53 AM IST

சென்னை, ஏப்ரல் 9 : அரசுப் பேருந்து எல்இடியில் விஜய்யின்  தமிழக வெற்றிக் கழகம் என்ற எழுத்துகள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.   இந்த நிலையில் பேருந்தின் வழித்தடப் பலகையினை இயக்கும் மென்பொருள் பலகை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது. அரசு பேருந்து ஒன்றில், வழித்தடத்தை அறிவிக்க வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டில், திடீரென தமிழக வெற்றிக் கழகம் என பெயர் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அரசு பேருந்தில் விஜய்யின் தவெக பெயர்

TN45 M4853 என்கிற பதிவெண் கொண்ட அரசு பேருந்தின், டிஸ்ப்ளேயில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பெயர் ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தின் வழித்தடம் இடம் பெறும் டிஜிட்டல் போர்டில் தமிழக வெற்றிக்கழகம் என ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகளும் குழப்பம் அடைந்தனர். இநது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அரசு போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் விஜய்யின் பரப்புரை திடீர் ரத்து – இதுதான் காரணமா?

இந்த நிலையில், கட்சியின் பெயர் பஸ்சின் டிஜிட்டல் போர்டில் ஓடியது தொடர்பாக  தமிழக அரசுபோக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.  இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,  சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் உள்ள பேருந்தானது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் லிமிடெட், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த புதிய பேருந்து ஆகும்.

அரசு போக்குவரத்துத்துறை விளக்கம்

 

இப்பேருந்தில் உள்ள மின்னணு வழித்தடப் பலகையில் சில வாசகங்கள் இடம்பெற்றது குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையினை இயக்கும் மென்பொருள்
பலகையை ஹேக்  செய்து, இத்தகைய தவறான வாசகங்களை பதிவிட்டது கண்டறியப்பட்டது.

இதையும் படிக்க : அரசியல்வாதியாக முதன்முறையாக பிரபல டிவிக்கு பேட்டியளிக்கும் விஜய் – எப்போ தெரியுமா?

இதனையடுத்து  இந்த சம்பவம் ஏப்ரல் 5, 202  நேற்று கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக அந்த மின்னணு பலகையின் மதர்போர்டு மாற்றப்பட்டு, சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டன. இது போன்ற செயல்கள் இனி நிகழாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மின்னணு பலகை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு   அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us