TVK Vijay: அன்றாட பணிகளை கவனிக்க தனிக்குழு.. புது வியூகம் வகுக்கும் தவெக தலைவர் விஜய்..!
Tamilaga Vettri Kazhagam: கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இந்த அரசியல் பேரணிக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்தனர்.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் கட்சிக்குள் மறுசீரமைப்பை திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஒரு பெரிய மறுசீரமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக கட்சியை மறுசீரமைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அதன்படி, தவெகவின் அன்றாட பணிகள், செயல்பாடுகளை ஒருங்கிணைக்க 28 பேர் அடங்கிய புது நிர்வாக குழுவை தவெக தலைவர் விஜய் (TVK Vijay) அமைத்தார். இந்த குழுவில் பொதுச்செயலாளர் எல். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
குழுவில் யார் இடம்..?
— TVK Vijay (@TVKVijayHQ) October 28, 2025
கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேற்று அதாவது 2025 அக்டோபர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் சந்தித்தார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தை தமிழக வெற்றிக் கழகம் ஏற்பாடு செய்தது. கரூரிலிருந்து 37 குடும்பங்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக, இந்த ரிசார்ட்டில் சுமார் 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த கூட்டத்தின்போது தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக சந்தித்ததாகவும், அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.




ALSO READ: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 37 குடும்பங்களுக்கு ஆறுதல் கூறும் விஜய்!
இந்த கூட்டத்தில் பங்கேற்ற குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கான செலவை ஏற்கொள்வதாக விஜய் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கரூரில் நடந்தது என்ன..?
கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இந்த அரசியல் பேரணிக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்தனர். உயிரிழந்த 41 பேரில் 18 பெண்கள், 15 பெண்கள், 10 குழந்தைகளும் அடங்கும். அதன்படி, உயிரிழந்தவர்களில் 34 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஈரோடு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தலா 2 பேரும், சேலத்தை சேர்ந்த ஒரு நபரும் ஆகும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய புலனாய்வு பிரிவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ALSO READ: நெல்மணிகள் வீணாகி முளைத்தது போல… திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய் வெளியிட்ட அறிக்கை
இதையடுத்து சிபிஐ விசாரணையை கண்காணிக்கவும், விசாரணை சுதந்திரமாக செயல்பட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது