மாணவர்களை சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்.. சொன்ன மெசேஜ் என்ன?

TVK Leader Vijay Meets Students: தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 8, 2025 ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியானது. அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விரைவில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்.. சொன்ன மெசேஜ் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

08 May 2025 12:07 PM

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் 8 மே 2025 -யான இன்று வெளியானது. இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதேபோல் விரைவில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 2025 முதல் மார்ச் 25 2025 வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகள் சரியாக 9:00 மணி அளவில் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்:


பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழ் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். த.வெ.க தலைவர் விஜய் 2023 ஆம் ஆண்டு முதல் இந்த பழக்கத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதாவது 2024 ஆம் ஆண்டு கட்சியை தொடங்கிய பின்னர் தொகுதிவாரியாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வு பெற்ற முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய் பரிசு தொகையை வழங்கினார்.

அதுமட்டுமல்லாது 234 தொகுதிகளிலும் 12 மற்றும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை இரண்டு கட்டங்களாக சந்தித்து சான்றிதழையும் ஊக்கத்தையும் தொகையும் வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விரைவில் சந்திப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், “12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்துவிடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி புதிய இலக்கை நோக்கி செல்ல அனைவருமே தயாராகுங்கள். வெற்றி காணுங்கள். வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்த விலங்கிட வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம் வெற்றி நிச்சயம்” என தெரிவித்துள்ளார்

ஆனால் மாணவர்களை சந்திக்கும் தேதி இன்னும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் 234 தொகுதிகளிலும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் லிஸ்டை எடுத்து பின்னர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்தும் செய்தவுடன் இந்த தேதிகள் வெளியாகும் எனவும், எத்தனை கட்டமாக சந்திக்கிறார் என்பதும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது