ஐபிஎல்லில் பங்களாதேஷ் வீரர்களைச் சேர்த்ததற்கு சில இந்து அமைப்புகளிடையே ஏற்பட்ட கோபம், ஐபிஎல் உரிமையாளராக இருக்கும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு எதிராக வெடித்துள்ளது. அகில இந்திய இந்து மகாசபையின் மாவட்டத் தலைவரான மீரா ரத்தோர், ஷாருக் கானின் நாக்கைக் கொண்டு வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.