நீதி வெல்லும்…. – கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் – விஜய் கமெண்ட்

Karur Stampede : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிபிஐ விசாரணைக் கோரிய மனு அக்டோபர் 13, 2025 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதனையடுத்து நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நீதி வெல்லும்.... - கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் - விஜய் கமெண்ட்

விஜய்

Updated On: 

13 Oct 2025 19:27 PM

 IST

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விஜய் மீது விமர்சனங்களை முன் வைத்ததுடன் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து இதற்கு எதிராக தவெக தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 13, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் நீதி வெல்லும் என கமெண்ட் செய்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கமெண்ட்

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் சிபிஐ விசாரணைக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இதனை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக தவெகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தவெக தலைவர் விஜய் நீதி வெல்லும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கு குறித்து வேறு எதுவும் குறிப்பிடவில்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு விஜய் பதிவிட்டுள்ள முதல் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : Karur Stampede: கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

விஜய்யின் எக்ஸ் பதிவு

 

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கத்து உத்தரவிட்டார். சிபிஐ விசாரணையைக் கண்காணித்து ஒவ்வொரு மாதமும் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : கரூர் சம்பவ விசாரணையை கண்காணிக்கும் அஜய் ரஸ்தோகி.. யார் தெரியுமா?

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அவரைக் காண தவெக கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்தனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் மேற்கொண்ட பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது தான் காரணம் என ஒரு தரப்பும், காவல்துறையினர் தாங்கள் கேட்ட இடத்தைக் கொடுக்காமல் குறுகலான இடத்தைக் கொடுத்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என தவெக தரப்பும் குற்றம்சாட்டி வருகின்றனர்.