‘புதுமைப் பெண்’.. ‘மகளிர் சுய உதவிக்குழு’.. மகளிருக்கான அதிரடி அறிவிப்புகள்..

Interim Budget announcements for women: இதுவலர 6,23,529 சுயஉதவிக் குழுக்கள் ரூ.1,41,718 கோடியை வங்கிக் கடனுதவியாக பெற்றுப் பயனடைந்திட வழிவகை செய்துள்ளது. சுய உதவிக் குழு மகளிரின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையைப் பெருக்கிட, வாழ்ந்து காட்டுவோம், முதலமான சீர்மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

‘புதுமைப் பெண்’.. ‘மகளிர் சுய உதவிக்குழு’.. மகளிருக்கான அதிரடி அறிவிப்புகள்..

தங்கம் தென்னரசு

Published: 

17 Feb 2026 11:02 AM

 IST

சென்னை, பிப்ரவரி 17: தமிழக சட்டப்பேரவையில் இன்று 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட இருக்கிறது. ஆகவே, இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.

புதுமைப்பெண் திட்டம்:

மகளிர் கல்வியைப் பாதுகாத்திட, தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை பெண் குழந்தைகளை ஆதரிப்பதற்காக,’புதுமைப்பெண் திட்டத்தை’ அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளுக்கு உயர்கல்வியைத் தொடர மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை, 6,95,296 மாணவயிர் பயன்பெற்றுள்ளனர்.

மகளிர் சுய உதவிக்குழு:

மகளிரின் தற்சார்பு வாழ்வுக்கு வழிகோல, 1989 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கம் கண்டார் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் நடைபோடும் இவ்வரசு, அவ்வியக்கம் தழைத்தோங்கிச் செழித்திடும் வகையில், இதுவலர 6,23,529 சுயஉதவிக் குழுக்கள் ரூ.1,41,718 கோடியை வங்கிக் கடனுதவியாக பெற்றுப் பயனடைந்திட வழிவகை செய்துள்ளது. சுய உதவிக் குழு மகளிரின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையைப் பெருக்கிட, வாழ்ந்து காட்டுவோம், முதலமான சீர்மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!