AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழனுக்கு தொண்டு செய்து மறைந்தவர் கலைஞர் – நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..

TN CM MK Stalin: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் தமிழ் தொண்டினை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த கருத்தரங்கம் பயன்பட வேண்டும் என பேசியுள்ளார்.

தமிழனுக்கு தொண்டு செய்து மறைந்தவர் கலைஞர் – நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 27 Jun 2025 13:36 PM IST

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சாகித்திய அகாதெமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் – சிறப்பு நிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசியவர், ” இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து, சிறப்பு மலர் வெளியிடும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் கலைஞர் மகனாக மட்டுமல்ல தமிழ்நாடு முதலமைச்சராக மிகப் பெருமிதத்தோடு உங்கள் முன் நின்று கொண்டுள்ளேன் என்றார். மேலும், கலைஞர் மேடை உரைகள் இலக்கியத்தின் மறுமுகம் எனவும்,
சட்டமன்ற உரைகள் சட்டமன்ற மாண்புக்கு இலக்கணம் என கூறினார்.

இந்தியாவிலேயே சிறந்த திட்டம் – முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், “ வாழ்வில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்தவர்…5 முறை முதலமைச்சராக இருந்து தொட்ட துறை எல்லாம் சாதனை படைத்தவர். அதனால் தான் அவர் சொன்னார், செங்கோலை பறித்துவிடலாம் ஆனால் எழுதுகோலை பறிக்க முடியாது என்று. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 15 அறிஞர்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. 10 மொழிபெயர்பாளர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டமாக இருந்தது என்ற வகையில் செயல்படுத்தி வருகிறோம்.

கலைஞர் ஆட்சி என்பது தமிழ் ஆட்சி, அதனால் தான் தமிழுக்கு செம்மொழியை பெற்று தந்தார். மொழிக்காக ஏராளமான திட்டத்தை செயல்படுத்தி தமிழ ஆட்சியை நடத்தி வருகிறோம்…கலைஞர் ஆட்சி என்பது தமிழ் ஆட்சி. அதனால் தான் தமிழுக்கு செம்மொழியை பெற்று தந்தார். மேலும், கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசு மொழிக்காக ஏராளமான திட்டத்தை செயல்படுத்தி தமிழ் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

நிகழ்ச்சியில் முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் இந்த கருத்தரங்கில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று பேர் காரணம்:

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று பேர் காரணம் என்பதை 20 ஆம் நூற்றாண்டு இறுதியும், 21ம் நூற்றாண்டு தொடக்கமும் மறந்துவிட முடியாது. அது பெரியார், அண்ணா, கலைஞர் … இந்த மூன்று பேரில் யார் நமக்கு அதிகம் பயன்பட்டார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். இப்படி சொல்வதற்கு என்னை யாரும் பழிக்க வேண்டாம். பெரியாரை, அண்ணாவை குறைப்பதோ… கலைஞரை உயர்த்துவதோ என்னுடைய நோக்கம் இல்லை, அப்படி இருந்தால் நான் நிச்சயமாக திராவிட இயக்கத்தில் மாணவனாக இருக்க மாட்டேன்.

பெரியாரை விட அண்ணாவை விட தமிழ் மக்களுக்கு அதிகமாக பயன்பட்டவர் கலைஞர் என்பது என்னுடைய கருத்து. பெரியார் ஆட்சி என்ற பொறுப்பை மறுத்துவிட்டார். தமிழ்நாட்டில் அவரது கருத்து ஆண்டதே தவிர, அதிகாரத்திற்கு அவர் வரவில்லை. அதிகாரத்தை பெரியார் விரும்பவில்லை.

அண்ணா ஆட்சிக்கு வந்தார். காலம் அவர் ஆயுளை குறைத்துவிட்டது. அதிகம் ஆள முடியவில்லை. பெரியார் வெறுத்து ஒதுக்கி ஆட்சி மறுப்பு… அண்ணாவிற்கு காலம் வழங்கிய ஆயுள் மறுப்பு… இந்த இரண்டையும் ஒன்றாக பெற்று ஆட்சியிலும் இருந்து, ஆயுளிலும் நீண்டு, கடைசி வரை தமிழனுக்கு தொண்டு செய்து மறைந்த கலைஞர் நூற்றாண்டு மட்டுமல்ல பல நூற்றாண்டு கொண்டாடும்.

முற்போக்கு சிந்தனை கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும்:


கலைஞர் கருணாநிதியின் தமிழ் தொண்டினை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த கருத்தரங்கம் பயன்பட வேண்டும். கலைஞரின் புகழ் பாடுவதாக மட்டுமில்லாமல் கலைஞர் உருவாக்க விரும்பிய சமத்துவ எண்ணமும் முற்போக்கு சிந்தனை கொண்ட சமுதாயத்தை உருவாக்க இது போன்ற கருத்தரங்கங்கள் பயன்பட வேண்டும்.

தமிழ் சமூகத்தில் கலைஞர் கருணாநிதி போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும் தங்களுடைய படைப்புகளை எழுதி வழங்க வேண்டும் சிறந்த படைப்புகளுக்கு இது போன்ற அமைப்புகள் பாராட்ட வேண்டும் படைப்பாளிகள் வாழ்கின்ற காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும் இதைத்தான் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகளும் இந்த பணியை தோல்வி இல்லாமல் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

Follow Us