AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூத்துக்குடி மாணவி வன்கொடுமை வழக்கு – குற்றவாளியை கைது செய்தது எப்படி? எஸ்பி விளக்கம்

Class 12 Student Case : விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தூத்துக்குடி எஸ்.பி.மதன் விளக்கமளித்துள்ளார்.

தூத்துக்குடி மாணவி வன்கொடுமை வழக்கு – குற்றவாளியை கைது செய்தது எப்படி? எஸ்பி விளக்கம்
குற்றவாளி தர்ம முனீஸ்வரன் - எஸ்.பி. மதன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Mar 2026 19:44 PM IST

தூத்துக்குடி, மார்ச் 19 : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் 9 நாட்களுக்கு பிறகு குற்றவாளியை காவல்துறைினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை முதல் குற்றவாளியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 9 நாட்களுக்கு மேலாக சிறுமியின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளதால் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே ஒரு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்டுகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு சென்றிருந்த நிலையில் காவலதுறையினர் அவரை கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : கோவையில் வரலாறு காணாத ஆலங்கட்டி மழை; சேதமடைந்த பயிர்

குற்றவாளி சிக்கியது எப்படி?

குற்றவாளியை கைது செய்தது குறித்து குறித்து செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி எஸ்.பி மதன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மார்ச் 11, 2026 அன்று சம்பவம் குறித்து கேள்விபட்டவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் 4 டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 150 காவலர்கள் இருந்தார்கள்.

மேலும் சம்பவம் நடந்த நாளில் இருந்து இன்று வரை திருநெல்வேலி மாவட்ட சரக டிஐஜி சரவணன் ஐபிஎஸ் தினமும் சம்பவம் நடந்த இடம், கிராமம் மற்றும் காவல் நிலையத்திற்கு சென்று எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். இந்த வழக்கில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதையும் படிக்க : கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பாதுகாப்பு vs போக்குவரத்து நெரிசல்.. தீர்வாக வரும் புதிய பைபாஸ்

சம்பவம் நடந்த அன்றே கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்தில் உள்ள தடையங்களை சேகரித்து தனித் தனியாக அறிக்கை அளித்தார்கள். மேலும் வெவ்வேறு கோணங்களில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. உதாரணமாக சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லை என்றாலும், சம்பவம் நடந்த இடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள 98 சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தோம். 2540 செல்போன் எண்கள் ஆய்வு செய்தோம். மேலும் ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர்களையும் விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது. இந்த அனைத்து குழுவும் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த நபரை நாங்கள் கைது செய்திருக்கிறோம் என்றார்.

Follow Us