தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய 443வது திருவிழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

Thoothukudi Panimaya Matha Church 443rd Festival: தூத்துக்குடியில் 443-வது பனிமய மாதா திருவிழா 2025 ஜூலை 25 முதல் 2025 ஆகஸ்ட் 6 வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முன்னிட்டு மாவட்ட அளவில் பல துறை இணைந்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. போக்குவரத்து, சுகாதாரம், பாதுகாப்பு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய 443வது திருவிழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

பனிமய மாதா பேராலய 443வது திருவிழா

Updated On: 

19 Jul 2025 06:35 AM

தூத்துக்குடி ஜூலை 19: தூத்துக்குடி (Thoothukudi) பனிமய மாதா பேராலய 443வது திருவிழா (443rd Festival of the Cathedral of Our Lady of the Snows) 2025  ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெறவுள்ளது. விழா முன்னெச்சரிக்கை கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் (Minister Geetha Jeevan) தலைமையிலான பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள், சப்பர பவனி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். போக்குவரத்து மாற்றம், மருத்துவ வசதி, சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பு, கொசு ஒழிப்பு, சாலைகள் பழுது பாரத்தல் உள்ளிட்ட பணிகளும் முன்னெடுக்கப்படுகிறது.

பனிமய மாதா பேராலயத்தின் 443வது திருவிழா

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 443வது திருவிழா 2025 ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 6, 2025 வரையில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மு.கா.கீதா ஜீவன் மற்றும் கலெக்டர் இளம்பகவத் தலைமையிலான அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

பனிமய மாதா பேராலய விழாவின் முக்கிய நிகழ்வுகள்

இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகள் 2025 ஆக, ஜூலை 25ம் தேதி கொடி பவனி, 2025 ஜூலை 26ம் தேதி கொடியேற்ற விழா, 2025 ஆகஸ்ட் 3ம் தேதி நற்கருணை பவனி, 2025 ஆகஸ்ட் 4ம் தேதி கோவிலை சுற்றி சப்பர பவனி, 2025 ஆகஸ்ட் 5ம் தேதி நகர வீதிகளில் சப்பர பவனி, 2025 ஆகஸ்ட் 6ம் தேதி கொடியிறக்கம் நடைபெற உள்ளன. திருவிழா நாட்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திட்டவட்டமாக மறுத்த தவெக

பொதுமக்கள் நலன் கருதி விழா காலங்களில் போக்குவரத்து மாற்றம்

பொதுமக்கள் நலன் கருதி விழா காலங்களில் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தம், சுகாதாரம், குடிநீர், மின் வசதி, மருத்துவ உதவிகள், தீயணைப்பு சேவைகள் போன்ற துறைகளும் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதா கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு, குப்பை அகற்றல், தற்காலிக கடைகள் அகற்றல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

வாகனங்களை எங்கே நிறுத்துவது?

திருவிழாவுக்காக தனித்துவமாக நியமிக்கப்பட்ட வாகன நிறுத்தங்கள் வடக்கு மற்றும் தெற்கு பீச் சாலை, ஜார்ஜ் சாலை, கால்டுவெல் பள்ளி மைதானம், தருவை மைதானம், ஜிசி சாலை, சேவியர் பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, போக்குவரத்து சீரமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், 108 ஆம்புலன்ஸ், நகர பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரித்தல், உணவுப் பொருட்கள் தரம் கட்டுப்பாடு உள்ளிட்ட பல முன் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், ஏ.எஸ்.பி. மதன், உதவி ஆட்சியர் புவனேஷ்ராம், பேராலயத்தின் அருட்தந்தை ஸ்டார்வின், விழா கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த திருவிழா, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் ஆன்மிக, கலாசார அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.