தைப்பூசம்: மேல்மருவத்தூரில் 57 எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல ஏற்பாடு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
Melmaruvathur: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிசம்பர் 15ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, ஜனவரி மாதம் 31ம் தேதி வரை இவ்விழா நடைபெறும். இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதேபோல், தமிழகத்தை தாண்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தின் முக்கிய ஆன்மீக தளங்களில் ஒன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில். இங்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். குறிப்பாக, சபரிமலைக்கு ஆண்கள் இருமுடி கட்டி, மாலை போட்டு செல்வது போல, தைப்பூச திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் மேல்மருவத்தூருக்கு இருமுடி கட்டி, மாலை அணிந்து செல்வார்கள். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச் செல்வார்கள்.
மேலும் படிக்க: பானிபூரி வாங்கி தருவதாக 5 வயது சிறுவன் கடத்தல்.. பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்.. கோவையில் பரபரப்பு!!




தைப்பூச இருமுடி விழா:
அந்தவகையில், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிசம்பர் 15ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, ஜனவரி மாதம் 31ம் தேதி வரை இவ்விழா நடைபெறும். இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதேபோல், தமிழகத்தை தாண்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அந்தவகையில், மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 2 வரை மொத்தம் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நிறுத்தம் பெறும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ஏற்கெனவே, டிசம்பர் 15ம் தேதி வரை மேல்மருவத்தூரில் ரயில்கள் நின்று செல்கின்றன. இந்நிலையில், தற்போது கூடுதலாக கால அவகாசம் பிப்ரவரி 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிவகாசி அருகே பயங்கரம்… இரு சிறுமிகளுக்கு எமனாக மாறிய வீட்டின் சுவர்…கதவில் விளையாடியது குற்றமா!
57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்:
Temporary Stoppage at Melmaruvathur Station for Train Services
One minute stoppage at Melmaruvathur Station in connection with the “Irumudi/Thaipoosam” festival for the following train services has been temporarily extended from 01.01.2026 to 02.02.2026 #SouthernRailway pic.twitter.com/jX6ceXpvzf
— DRM MADURAI (@drmmadurai) December 27, 2025
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் (12635) மற்றும் மதுரையிலிருந்து எழும்பூருக்கு வரும் (12636) வைகை எக்ஸ்பிரஸ், எழும்பூர் – மதுரை (12637) மற்றும் மதுரை – எழும்பூர் (12638) பாண்டியன் எக்ஸ்பிரஸ், எழும்பூர் – திருச்சி (12653), திருச்சி – எழும்பூர் (12654) எக்ஸ்பிரஸ், எழும்பூர் – செங்கோட்டை (12661), செங்கோட்டை – எழும்பூர் (12662) பொதிகை எக்ஸ்பிரஸ், எழும்பூர் – கொல்லம் (16101), கொல்லம் – எழும்பூர் (16102), எழும்பூர் – தஞ்சாவூர் (16865), தஞ்சாவூர் – எழும்பூர் (16866) உழவன் எக்ஸ்பிரஸ், தாம்பரம் – நாகர்கோவில் (20691), நாகர்கோவில் – தாம்பரம் (20692) அயோத்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மொத்தம் 57 ரயில்கள் மேல்மருவத்தூரில் தற்காலிக நிறுத்தம் பெறும்.