’ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம்’ டெட் தேர்வு குறித்து அன்பில் மகேஷ் சொன்ன விஷயம்

TET Exam : டெட் தேர்வு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் முக்கியமாக பேசியுள்ளார். அதாவது, டெட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவால் ஆசிரியர்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்றும் கூறினார்.

’ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம் டெட் தேர்வு குறித்து அன்பில் மகேஷ்  சொன்ன விஷயம்

அன்பில் மகேஷ்

Updated On: 

19 Sep 2025 16:36 PM

 IST

சென்னை, செப்டம்பர் 19 : டெட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆசிரியர் பணியில் சேர டெட் எனும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாகி உள்ளது. 1 முதல் 8ஆம் தேதி வரை பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எனும் தேர்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு தாள் 1, 2 என நடத்தப்பட்டு வருகிறது. தேர்வுகளில் ‘ எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் தான், 2025 செப்டம்பர் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை வெளியிட்டு இருந்தது.

அதாவது, ஆசிரியர் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்சசி பெறவில்லையெனில் அவர்கள் வேலையை விட்டு விலகலாம் அல்லது இறுதிச் சலுகைகளுடன் கட்டாய ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read : ஆசிரியர்களே கவனிங்க.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. இனி வேலைக்கு சிக்கல்!

’ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம்’

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டெட் தேர்வு குறித்து முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “டெட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். இது தொடர்பான பதிவு பட்டியல் நாளை வெளியாகும். இது தொடர்பாக தமிழக அரசு சட்டரீதியாக போராடி வருகிறது. இதனால், ஆசிரியர்கள் யாரும் பயப்படத் தேர்வையில்லை.

Also Read : தேர்வர்களே அலர்ட்.. டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இந்த வழக்கு குறித்த வழிமுறைகளை தெளிவுப்படுத்த மகாராஷ்டிரா அரசும் கேட்டுள்ளது. அதைப் போலவே தமிழக அரசு செயல்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் கூட  டெட் தேர்வு குறித்து பேசிய அன்பில் மகேஷ், இது தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்வோம். ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு குழந்தையின் தரமான கல்விக்கான உரிமையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தீவிரமாகப் போராடுவோம்” என கூறியிருந்தார்.