AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?.. வானிலை ரிப்போர்ட் இதோ..

Weather Update: இன்று முதல் 4 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?.. வானிலை ரிப்போர்ட் இதோ..
மாதிரி புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 May 2026 06:32 AM IST

Tamilnadu Weather Today: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பநிலையின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தேர்தல் முடிவுகள்.. குழந்தைகளின் மனநிலையைக் கவனியுங்கள்.. பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

இன்று கனமழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (மே 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் மழை நிலவரம்:

மே 2ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மே 3ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். மே 6ஆம் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம்:

இன்று முதல் 4 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.

மேலும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 – 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us