AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கப்போகுது.. வானிலை ரிப்போர்ட் இதோ..

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கப்போகுது.. வானிலை ரிப்போர்ட் இதோ..
மாதிரி புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 May 2026 06:34 AM IST

தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் சுமார் 3.1 கிமீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ உயரத்தில் நிலவும் வழிமண்டல சுழற்சி காரணமாக குமரிக்கடல் பகுதிகள் வரை கேரளம், தென் தமிழக பகுதிகள் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த பாதை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : அவர் எந்த சமூகம் என்றே தெரியாது – சர்ச்சைக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம்

இன்று கனமழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (மே 23) நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்களில் மழை நிலவரம்:

மே 24 நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மே 25ம் தேதி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மே 26ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். மே 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிபட்ச வெப்பநிலை மாற்றம்:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். குறிப்பாக இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌவுகரியம் ஏற்படலாம்.

இதையும் படிக்க : “இபிஎஸ் தான் எங்களின் பொதுச்செயலாளர்”… வேலுமணி தரப்பு திடீர் பல்டி.. பின்வாங்க காரணம் இதுதான்?..

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us