AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டும்.. வெயில் குறையுமா?.. வானிலை அப்டேட் இதோ!!

Tamilnadu Weather Update: மார்ச் 25ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகப்பட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, மார்ச் 21, 22ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டும்.. வெயில் குறையுமா?.. வானிலை அப்டேட் இதோ!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Mar 2026 06:32 AM IST

Tamilnadu Weather: தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி, படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும், ஏப்ரல், மே மாதமே வராத நிலையில், தற்போதே கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இந்தநிலையில், கோடை வெப்பத்தில் இருந்து ஆறுதல் தரும் விதமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வரும் நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படிக்க : குடிநீர் பாட்டில் விலை கடும் உயர்வு – ஒரு லிட்டர் பாட்டில் விலை இவ்வளவா?

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (மார்ச் 22) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனக் கூறியுள்ளது.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்:

மார்ச் 23,24ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 25, 26ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 27ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

மார்ச் 25ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகப்பட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, மார்ச் 21, 22ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். மார்ச் 23 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இதையும் படிக்க : 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி… தொழிலாளர் நல தீர்ப்பாயம் ஆணை..!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us